சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸ்

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ அக்டோபர் 7-ம் தேதி ரிலீஸ்

நாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும்தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் மனதோடு நேரடி தொடர்பில் இருக்கும்.

அப்படி அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம், சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்து கொண்டிருக்கும் ‘ரெமோ’.

remo_nurse 

‘ரெமோ’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, ரெமோ படத்தின் போஸ்டர் வெளியீடு என ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும்  மிக பிரம்மாண்டமான முறையில் ரெமோ படக் குழுவினர் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றனர்.

ஆனால் வெறும் பிரம்மாண்டம் மட்டுமில்லாமல், சிறந்த  கதைக் களம், படக் குழுவினரின் கடின உழைப்பு என எல்லாம்தான் ‘ரெமோ’ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது.  

இப்படி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் ‘ரெமோ’ திரைப்படமானது வருகின்ற அக்டோபர் ஏழாம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது.

அனிரூத்தின் துள்ளலான இசையில் அமைந்துள்ள ‘ரெமோ சிக்நேச்சர் தீம்’ மற்றும் ‘செஞ்சிட்டாளே’ பாடல்கள் ரெமோ படத்தின் எதிர்பார்ப்புக்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

remo stills

“எப்படி ஒரு குழந்தை கருவில் உருவான நிமிடம் முதல் பிறக்கும்வரை இருக்கும் தருணங்களை அதன் குடும்பமும், நட்பு வட்டாரமும் கொண்டாடுகிறதோ, அதே போல்தான் எங்கள் ‘ரெமோ’ படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கள் ஒட்டு மொத்த படக் குழுவினரின் அயராத உழைப்புக்கும், சிந்திய வியர்வைக்கும் கிடைத்த பலனாகத்தான் இதை நாங்கள் கருதுகிறோம்.  

இதைவிட ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் மகிழ்ச்சி எந்த விதத்திலும் அமையாது.  எல்லா மொழிகளையும், மதங்களையும் தாண்டி, அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக செயல்படுவது அன்புதான்.

ரசிகர்கள் ரெமோ படத்தின் மீது காட்டி வரும் அன்பிற்கு சிறிதளவுகூட  குறையில்லாமல் இருக்கும், அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகும் ‘ரெமோ’ திரைப்படம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 24 ஏ.எம். ஸ்டூடியோஸின் நிறுவனர் ஆர். டி. ராஜா.

Our Score