full screen background image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம்!

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ‘றெக்கை முளைத்தேன்’ திரைப்படம்!

இயக்குநர் S.Rபிரபாகரனின் ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ‘றெக்கை முளைத்தேன்’.

இந்தப் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மற்றும் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் இவர்களுடன் ஐந்து புதுமுகங்களும் நடிக்கின்றனர். 

பின்னணி இசையை தரண்குமார் அமைக்க பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவில், பிஜு டான் போஸ்கோ படத் தொகுப்பு செய்ய, கார்த்திக் துரை நிர்வாக தயாரிப்பு செய்ய, பத்திரிக்கை தொடர்பினை ஷேக் கவனித்து கொள்ள, இணை தயாரிப்பாளராக A.முனிஸ்வர், K.தீரா இணைய இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் S.R.பிரபாகரன் பேசும்போது. “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. இத்திரைப்படத்தின் First Single விரைவில் வெளிவரும்..” என்றார்.

கடந்த வாரம் இத்திரைப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் இந்தப் படம் இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என்று பாராட்டி ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

Our Score