பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது.
இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் நாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். ‘வால்டர்’ பட இயக்குநரான அன்பு, இந்தப் படத்தை இயக்குகிறார்.
பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
இந்த பூஜை நிகழ்வில் நாயகி வாணி போஜன், தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி.வி.குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ‘ரேக்ளா’ படத்தின் படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.