அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘ரெட் ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் ‘ரெட் ரம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

டைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் அண்ணாமலை தயாரித்துள்ள திரைப்படம் ‘ரெட் ரம்.’

‘காக்க காக்க’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ உள்ளிட்ட திரைப்படங்கள், மற்றும் ‘அட்டக் கத்தி’, ‘சூது கவ்வும்’, ‘பீட்சா’ ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றி, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் இது.

‘பில்லா-2’, ‘பீட்சா’, ‘தெகிடி’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சவாலே சமாளி’, ‘144’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘முப்பரிமாணம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன், இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடைய நடிப்பில் ஏற்கெனவே ‘ஆக்ஸிஜன்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

நாயகியாக சம்யுக்தா ஹர்னாத் நடிக்கவிருக்கிறார். கன்னட நடிகையான இவர் ஏற்கெனவே தமிழில் ‘உன் சமையலறையில்’ படத்தில் நடித்திருக்கிறார். இது இவரது இரண்டாவது தமிழ்ப் படமாகும்.

மற்றும் தீபக் பரமேஷ், மதுமதி, ஜான் மகேந்திரன், செய்யது மைதீன், சரத் ரவி, நிஷாந்த் மோகன்தாஸ், எபனேசர், கிரிஷ் மது, பிரவின், ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – சுந்தர் அண்ணாமலை, எழுத்து, இயக்கம் – விக்ரம் ஸ்ரீதரன், ஒளிப்பதிவு – குகன் எஸ்.பழனி, இசை – விஷால் சந்திரசேகர், பாடல்கள் – நவீன்.பி, படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஏ.கோபி ஆனந்த், ஸ்டைலிஸ்ட் – மீனாட்சி தரன், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், கிராபிக்ஸ் – ராம்குமார், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், இணை தயாரிப்பு – கே.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு – நிகில்.

வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும்விதமாத இத்திரைப்படம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. 

சென்னை, அதன் சுற்றுப்புறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளவிதம், ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என்கிறார் இயக்குநர்.  

படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.

Our Score