உமாபதி ராமையா, மனிஷா யாதவ் நடிக்கும் ‘தேவதாஸ்’ திரைப்படம்

உமாபதி ராமையா, மனிஷா யாதவ் நடிக்கும் ‘தேவதாஸ்’ திரைப்படம்

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்களான தம்பி ராமையா - ஷாகுல் ஹமீது இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தேவதாஸ்’.

‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய  படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் நாயகனாக நடிக்கிறார் உமாபதி ராமையா. மனிஷா யாதவ் நாயகியாக நடிக்கிறார்.

இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகராகத் திகழும் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வலம் வருகிறார்.

ஒளிப்பதிவு – யுகா, இசை – தினேஷ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – தாமரை, ரோகேஷ், நிகில் முருகன் - மக்கள் தொடர்பு, எழுத்து, இயக்கம் இரா. மகேஷ்.

மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக் களம்.

இப்படம் பார்க்கும் அனைவருக்கும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும்விதமாக உருவாகி இருக்கிறது இப்படத்தின் திரைக்கதை.  

இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் இரா.மகேஷ்.