full screen background image

“படத்தின் தலைப்பை மாற்றுங்கள்..” – கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் வேண்டுகோள்..!

“படத்தின் தலைப்பை மாற்றுங்கள்..” – கமல்ஹாசனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் வேண்டுகோள்..!

நடிகர் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’ என்று தனது அடுத்தப் படத்திற்கு தலைப்பு வைத்த்தற்கு பல்வேறு பிரிவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளரும் குன்னம் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற வேட்பாளருமான ரவிக்குமார், இது குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், “தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சாதி வெறி தலைவிரித்தாடுகிறது. முன்பு ஹரியானாவில் மட்டுமே இருப்பதாகப் பேசப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இப்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் சாதியின் பெயரை ஒரு படத்தின் தலைப்பாகவோ பாத்திரங்களின் பெயர்களாகவோ பயன்படுத்துவது தமிழகச் சூழலை மேலும் சீரழிப்பதாகவே அமையும்.

முன்னர் அப்படி தலைப்பு வைத்து கமல்ஹாசன் எடுத்த ‘தேவர் மகன்’ படத்தின் பாதிப்பு இன்னும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, மீண்டும் அப்படியொரு விபரீத முயற்சியில் ஈடுபடவேண்டாம் என கமல்ஹாசன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைப்பிலோ, வசனங்களிலோ சாதிப் பெருமிதத்தை வெளிப்படுத்தும் திரைப்படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

Our Score