full screen background image

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது!

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகிறது!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில், சி.எஸ்.அமுதனின் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்தம்’ திரைப்படம் வகும் அக்டோபர் 6-ம் தேதியன்று வெளியாகிறது..!

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – சி.எஸ்.அமுதன், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், இசை – கண்ணன் நாராயணன், கலை இயக்கம் – செந்தில் ராகவன், சண்டை இயக்கம் – திலீப் சுப்ராயன், பப்ளிசிட்டி டிசைன் – சந்துரு, தண்டோரா, டிஜிட்டல் புரோமோஷன் – டிஜிட்டல்.

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக இந்த ‘ரத்தம்’ திரைப்படம் வெளியாக உள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தப் படத்தின் திரையரங்க வெளியீடு, செப்டம்பர் 28-ம் தேதியில் இருந்து, அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

‘தமிழ் படம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக இந்த ‘ரத்தம்’ உருவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ரத்தம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளை தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இந்த ‘ரத்தம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என்பதை படக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Our Score