தன்ஷிகா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ராணி’

தன்ஷிகா நடிக்கும் புதிய திரைப்படம் ‘ராணி’

புதிய இயக்குனர் பாணியின் படைப்பில் நடிகை தன்ஷிகா ‘கபாலி’ முடித்த கையோடு ‘ராணி’யாக  களமிறங்குகிறார்.

இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ‘தங்கமகன்’ ஒளிப்பதிவாளர் ஏ.குமரன் ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் ஏ.எல். ரமேஷ்,  கலை விஜயகுமார். இப்படத்தின் இயக்குனர் பாணி, இயக்குநர் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்படத்தக்கது.

தயாரிப்பு – எம்.கே பிலிம்ஸ், இயக்குநர் – எஸ்.பாணி, தயாரிப்பாளர் – சி. முத்து கிருஷ்ணன், மியூசிக் – இளையராஜா, கேமரா – ஏ.குமரன்,  கலை – விஜயகுமார், படத் தொகுப்பு – ஏ.எல் ரமேஷ், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.பி.சொக்கலிங்கம், பாடல்கள் – பழனி பாரதி, பி.ஆர்.ஒ – ரியாஸ் கே. அகமது, சவுண்ட் டிசைன் – உதயகுமார், ஸ்டில்ஸ் – எஸ்.பி.சுரேஷ்.

இந்தப் படத்தின் பூஜை கடந்த வாரம் திருவண்ணாமலையில் இசைஞானி இளையராஜாவின் முன்னிலையில் நடைபெற்றது. படத்தின் பெரும் பகுதி மலேசியாவில் நடைபெறுவதாக இருப்பதால், ‘ராணி’ டீம் மலேசியாவிற்கு பயணிக்கவுள்ளது.

Our Score