full screen background image

“இப்போது எல்லாருடைய பார்வையும் தன்ஷிகா மீதுதான்..” – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் பாராட்டு..!

“இப்போது எல்லாருடைய பார்வையும் தன்ஷிகா மீதுதான்..” – இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் பாராட்டு..!

‘ராணி’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா, சாய் தன்ஷிகா, இயக்குநர் பாணி, தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன், இயக்குநர் சமுத்திரகனி, நடிகர் நமோ நாராயணன், இயக்குநர் கரு,பழனியப்பன், இயக்குநர் பேரரசு, இயக்குநரும், நடிகருமான மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

img_1712

விழா துவக்கத்தில் படத்தின் டிரெயிலரும் இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன. படத்தில் 2 பாடல்கள் மட்டுமே உண்டு. படத்தின் இசையும், டிரெயிலரில் ஒலிக்கும் பின்னணி இசையும் இசைஞானியின் பெயரைச் சொல்கின்றன.

இந்தப் படத்தில் நடிகை தன்ஷிகா இரண்டு மகள்களுக்குத் தாய் கேரக்டரில் நடித்துள்ளார். இவருடைய மகள்களில் ஒருவர் அமானுஷ்யமான கேரக்டரில் நடித்திருக்கிறாராம். அந்த மகளை யாரோ ஒருவர் கடத்திச் சென்றுவிட அதை மீட்க தன்ஷிகா நடத்தும் போராட்டமே இந்த ‘ராணி’ படம் என்பது ‘ராணி’யின் டிரெயிலரை பார்த்தபோது புரிந்தது.

img_1549

விழாவில் பேசிய நடிகை தன்ஷிகா, “இந்த ‘ராணி’ திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடித்தது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனிதான். அவர் சொன்னதால்தான் நான் இப்படத்தில் நடித்தேன். என்னை அறிமுகபடுத்திய இயக்குநர் ஜனநாதன் முதல் கபாலி இயக்குநர் ரஞ்சித் மற்றும் ‘ராணி’ திரைப்படத்தின் இயக்குநர் பாணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்..” என்றார்.

விழாவில் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் பேசும்போது, “இப்படத்தின் இயக்குநர் பாணி, இயக்குநர் சமுத்திரகனி அவர்களின் உதவி இயக்குநர். சமுத்திரகனியின் உதவி இயக்குநர், சசிகுமாரின் உதவி இயக்குநர் எல்லாம் ஒன்றுதான். வேறு, வேறு இல்லை.

img_1703

இப்படத்தின் கதை எனக்கு தெரியும். சிறந்த கதை. இசைஞானி இளையராஜாவின் இசை மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் பாணி தேனீ போல் உழைத்து இப்படத்தை சிறப்பாக உருவாகியுள்ளார். ‘கபாலி’ படத்துக்கு பின்னர் எல்லோருடைய கவனமும் தன்ஷிகா மீதுதான். ‘ராணி’ படத்துக்கு பின்னர் தன்ஷிகா மேலும் மிகப் பெரிய இடத்துக்கு செல்வார்..” என்றார்.

Our Score