காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘ரங்கா’ திரைப்படம்

காஷ்மீரில் படமாக்கப்பட்ட ‘ரங்கா’ திரைப்படம்

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே.செல்லையா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரங்கா.’

சிபிராஜ் – நிகிலா விமல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. காஷ்மீரில் பஹால்கம் மற்றும் குல்மார்க்  போன்ற இடங்களில்  படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

“இயக்குநர் வினோத் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று என்னை கேட்டபோது அங்கு அதற்கான சூழ்நிலை அரசியல் ரீதியாகவும் இல்லை. பாதுகாப்பு ரீதியாகவும் இல்லை. இயற்கையும் ஆதரவாக இல்லை  என பலர் எங்களை அச்சமுறுத்தினர்.

ஆனாலும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே, உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம். ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதை செய்வதுதான் நல்லது என எனக்கு தோன்றியது.

படத்தின் முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் இதுவரையிலும் யாரும் பார்த்திருக்காத இடங்களில் எல்லாம் படமாக்கினோம். இதற்காக உடல் ரீதியாகவும் மிகவும் சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனி புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. நாங்கள் சற்றும் சளைக்காமல்  மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்தக் கட்ட படப்பிடிப்பை முடித்தோம். காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன.

சிபிராஜ் சாரும், ஹீரோயின் நிகிலாவும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள்.  சண்டை இயக்குநர் திலீப் சுப்புராயன் சாரும், அவருடைய குழுவினரும் அந்த பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகை ஆகாது. 

இப்போது படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டோம், இப்போது இங்கு அடிக்கும் வெயில்தான் எங்களுக்கு மிக கொடுமையாக இருக்கிறது…” என்றார் தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா.

Our Score