full screen background image

‘நிபுணன்’ படத்தின் டீஸர் மே 15-ல் ரிலீஸ்

‘நிபுணன்’ படத்தின் டீஸர் மே 15-ல் ரிலீஸ்

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அந்த படங்களின் கதையம்சமும், படமாக்கப்பட்ட விதமும்தான். இதன் அடிப்படையில் அதே அளவுகோலில் தயாரிக்கப்பட்டு விரைவில் வெளிவர தயாராக இருக்கும் படம்தான் ‘நிபுணன்’.

பல்வேறு நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகன் action King அர்ஜுன்.

“இந்தப் படத்தின் டீசரை வருகின்ற மே 15-ம் தேதி வெளியிடவுள்ளோம். அர்ஜுன் சாரின் 150-வது படமாக வெளிவரவுள்ள இந்தப் படத்தை நாங்கள் இந்தக் டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும்,  சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம்.

அவரை தவிர இந்தப் படத்தில் உள்ள நட்சத்திர குவியலையும் இந்த டீஸர் மூலம் காணலாம். இதன் வாயிலாக ரசிகர்களும், திரை உலக வர்த்தகத்தினரும் ‘நிபுணன்’ படக்த்தின் தரத்தை உணர்வர்.

‘நிபுணன்’ என்பது இந்தப் படத்தின் கதாநாயகனை குறிப்பிடுவது. கற்பனைக்கும் எட்டாதவிதத்தில் தன்னுடைய பணியில்  அறிவாற்றலினாலும், கடும்  உழைப்பினாலும் உயரே பறக்கும் ஒரு சாதனையாளனின் கதைதான் இந்த ‘நிபுணன்’.

ஹாலிவுட் படங்களை பார்த்து அவர்களது கதை அம்சத்தை பாராட்டி, அவர்களின் தயாரிப்பு திறனை பாராட்டும் ஒரு சராசரி ரசிகனின் தேவையை பூர்த்தி செய்யும் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் ‘நிபுணன்’.

அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில், நவினின் இசை அமைப்பில், சதீஷ் சூர்யாவின் படத் தொகுப்பில்,  உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன், மற்றும் நான் இணைந்து Passion ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் கவரும்…” என நம்பிக்கை தெரிவித்தார் படத்தின் இயக்குநரான அருண் வைத்தியநாதன்.

Our Score