full screen background image

ராம்கோபால் வர்மாவின் நாயகி தமிழில் அறிமுகமாகிறார்..!

ராம்கோபால் வர்மாவின் நாயகி தமிழில் அறிமுகமாகிறார்..!

இந்திய சினிமாவின் பிரபல மற்றும் சர்ச்சையான இயக்குநரான ராம்கோபால் வர்மா அறிமுகப்படுத்திய ஒரு நாயகி, இப்போது தமிழிலும் அறிமுகமாகிறார்.

அந்த நாயகியின்   பெயர்   கிருஷ்ணா கெளதம். அந்தப் புதிய திரைப்படத்தின் பெயர் ‘வசந்தம் வந்தது’.

தமிழினி  திரை  வெளிச்சம்’  என்கிற புதிய பட கம்பெனியும், ‘பாரதி பட சுருள்’  நிறுவனமும் இணைந்து இந்த ‘வசந்தம் வந்தது’ என்னும் புதியப்  படத்தைத்  தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில்  ராம்கோபால் வர்மா அறிமுகப்படுத்தியிருக்கும் கிருஷ்ணா கெளதம் என்ற புதுமுக நடிகை, நாயகியாக நடிக்கிறார். இவர் ஹிந்தியில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நடித்திருக்கும் ‘12-ஓ கிளாக்’ என்ற படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்  எழுதி  இயக்குகிறார்  பாரதி செங்கோடு. இவர் பல நாடகங்களை எழுதி இயக்கியும் பல முன்னணி படங்களை  கோவை ஏரியாவில் விநியோகம் செய்த விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.

படத்தின்  5  பாடல்களை   Dr.வடுகம் R.சிவகுமார் IPS.. சத்யா ராகவேந்திரா. இயக்குநர் பாரதி செங்கோடு  ஆகியோர்  எழுதி உள்ளனர்.

செல்வா ஜானகி ராஜ்  இசையில்  மனோ, சைந்தவி, ஸ்ரீராம், பிரசன்னா, வல்லவன், முகேஷ், அனு சுப்பையா, லக்ஷ்மி அம்மா ஆகியோர் குரல்களில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன.

மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள்,  இதர கதாப்பாத்திர தேர்வுகளும் தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி  மாதம் துவங்குகிறது. படம்  மே மாதம் திரைக்கு வருகிறது.

ஊட்டி, கொடைக்கானல், பாண்டி, கோவை, பொள்ளாச்சி. கோபிச்செட்டிப்பாளையம், வடுகம்  ஆகிய இடங்களில்  படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Our Score