ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல’..!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படம் ‘பத்து தல’..!

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்திற்கு பத்து தல’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்த டைட்டிலை தமிழ்ச் சினிமாவின் பிரபலமான 10 இயக்குர்கள் இணைந்து இன்று காலை அறிவித்தார்கள்.

இயக்குநர்களான வெங்கட் பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய் மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குநர்கள் இந்த படத்தின் டைட்டிலை சற்று முன் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிகர் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார். சூர்யா நடித்த ’சில்லுன்னு ஒரு காற்று’ மற்றும் ஆரி நடித்த நெடுஞ்சாலை படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.

கன்னட திரையுலகில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ’முப்தி’ என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார். இது இவர் தயாரிக்கும் 20-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது.

Our Score