full screen background image

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கும்படி தனுஷிற்கு ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள் கடிதம்..!

சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கும்படி தனுஷிற்கு ராமகிருஷ்ணா மடத்தின் துறவிகள் கடிதம்..!

15 கோடி பட்ஜெட்.. வரவு 30 கோடியைத் தாண்டிவிட்டது. சூப்பர் ஹிட் என்றெல்லாம் ‘வேலையில்லா பட்டதாரி’யை பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்..

இன்னொரு பக்கம் சகலையை கிண்டல் செய்து வில்லத்தனம் செய்திருக்கிறார் என்று ஒரு சர்ச்சையும் ஓடி ஓய்ந்திருக்கிறது.

இப்போது கூடுதலாக இன்னொன்று.. படத்தில் இடம் பெறும் ஒரு வசனம் தங்களது கல்வி நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அசிங்கப்படுத்துவதாகச் சொல்லி ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும், நிர்வாகிகளும் குமுறி வருகிறார்கள்.

velaiilla pattathari-movie-new-images-21

ஒரு காட்சியில் அம்மா சரண்யாவிடம் பேசும் தனுஷ், தன்னை ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்க வைத்துவிட்டு தம்பியை மட்டும் கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்ததாக புகார் கூறுவார்..

இந்தக் காட்சியில் வரும் வசனத்தினால் ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படித்து முடித்து வெளியில் வந்தால் வேலை கிடைக்காமல் திண்டாடுவார்கள்.. தனுஷ் போல கஷ்டப்படுவார்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக அப்பள்ளி மாணவர்கள் புகார் கூறுகிறார்கள்.

ஹிந்து மஹா சபையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் நேற்று ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனுஷின் வீட்டை முற்றுகையிட வந்து கைதானார்கள். சில நாட்களாக மாநிலம் முழுவதிலும் இருக்கும் ராமகிருஷ்ணா மிஷின் பள்ளிகளின் மாணவர்கள் இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இன்றைக்கு ராமகிருஷ்ணா மிஷின் பள்ளிகளின் தலைமை குரு தனுஷிற்கு விடுத்துள்ள செய்தியில், எங்கள் மனதை புண்படுத்தியிருக்கும் அந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்கிவிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

படத்தின் சார்பிலோ “இதுவும் படத்துக்கு ஒரு நல்ல பிரமோஷனா இருக்கு.. இதை இப்படியே கமுக்கமா ஓட்டிக்கிட்டிருங்க.. மெதுவா பார்த்துக்கலாம்.. என்று சொல்லியிருக்கிறார்களாம்..!

எது, எதைத்தான் பிரமோஷனா யூஸ் பண்றதுன்னு இல்லீங்களா ஸார்..?

Our Score