‘புன்னகைப் பூ’ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிவப்பு.’
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா – ரூபா மஞ்சரி, ராஜ்கிரண், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். ‘கழுகு’ சத்யசிவா இயக்கியுள்ளார்.
இப்படத்தை பார்த்த ராஜ்கிரண் சமீபத்தில் வெளியான ‘மஞ்சப் பை’ படம் தனக்கு மிகப் பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி ‘சிவப்பு’ படமும் தனக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறாராம். இதனால் ‘சிவப்பு’படத்தை ராஜ்கிரணே வாங்கி வெளியிடவிருக்கிறாராம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது இந்த ‘சிவப்பு.’
நடிகர் ராஜ்கிரண் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச் சினிமாவில் விநியோகஸ்தராக இருப்பவர். 16 வயதினிலே படத்தை வாங்கி விநியோகம் செய்தவரும் ராஜ்கிரண்தான் என்பது குறிப்பிடத்தக்கது.