கிராமத்து பின்னணியில் வாழ்க்கையைத் துவக்கிய ஒவ்வொருவருக்கும், ஆலமரத்தின் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும்.
ஒவ்வொரு ஆலமரமும் தன்னுள் அடக்கி இருக்கும் கதைகள் அதன் விழுதுகளைவிட நீளமாகவும், அதன் வேர்களைவிட ஆழமாகவும் இருக்கும்.
பீகாக் pictures என்னும் புதிய பட நிறுவனம் ‘ஆலமரம்’ என்ற தலைப்பில் அத்தகைய ஒரு உன்னதமான பதிவைப் படமாக தயாரித்துள்ளனர்.
ஹேமந்த் குமார் ஹீரோவாகவும், அவந்திகா மோகன் ஹீரோயினாவும் அறிமுகமாகுகிறார்கள். தவரி, சர்வேஸ், திண்டுக்கள் அலெக்ஸ், ராஜ்விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
பழனிவேல் படத்தொகுப்பு செய்கிறார். உதயசங்கரின் ஒளிப்பதிவு செய்கிறார். ராம் ஜீவன் இசையமைக்கிறார். எஸ்.என்.துரைசிங் என்ற புதுமுக இயக்குநர் இதனை இயக்குகிறார்.
இந்த ‘ஆலமரம்’, தேனி, மதுரை ஆகிய ஊர்களின் இயற்கை அழகு கொஞ்சும் சுற்றுப்புறங்களில் படமாக்கபட்டுள்ளது.