சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘ஜெயிலர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, கிளி அரவிந்த் உட்பட நெல்சன் படங்களின் ஆஸ்தான நடிகர்கள் இந்தப் படத்திலும் இருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்துக்கு திரைக்கதையில் நெல்சனுக்கு உதவி செய்வதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மட்டும் செய்வதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.