full screen background image

NETFLIX ஓடிடி தளத்தில் ‘டான்’ படம் செய்திருக்கும் சாதனை..!

NETFLIX ஓடிடி தளத்தில் ‘டான்’ படம் செய்திருக்கும் சாதனை..!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டான்’ திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த மே 13-ம் தேதி வெளியான படம் ‘டான்’.

வெளியீட்டுக்குப் பின்னர் கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்றாலும், ரசிகர்களை இந்தப் படம் பெரிதும் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, 100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது.

ஒரு தந்தைக்கும், மகனுக்கிடையேயான உறவு சிக்கல்களை பேசும் இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படம் குறித்த கருத்துக்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த டான் படம் பற்றிய புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில் இந்த வாரம் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களில் பட்டியலில் ‘டான்’ முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ’ஆர்ஆர்ஆர்’ பட ஹிந்தி பதிப்பும், 3-வது இடத்தில் இண்டர்செப்டர்’ படமும், 4-வது இடத்தில் ‘சி.பி.ஐ. 5 தி பிரெய்ன்’ படமும் 5-வது இடத்தில் ‘ஜன கன மன’ படமும் உள்ளது. 

மேலும் 6-வது இடத்தில் ஜெர்ஸி’, 7-வது இடத்தில் ‘கங்குபாய்’, 8-வது இடத்தில் ‘ஜன கன மன’ தெலுங்கு பதிப்பு, 9-வது இடத்தில்  ‘ரா’ (பீஸ்ட்), 10-வது இடத்தில் ஹஸ்டில்’ என்ற படமும் உள்ளது.

இதனயைடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இந்த நெட்ஃபிளிக்ஸ் பதிவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். 

Our Score