கோவா உலகத் திரைப்பட விழாவில் ரஜினிக்கு சாதனையாளர் விருது..!

கோவா உலகத் திரைப்பட விழாவில் ரஜினிக்கு சாதனையாளர் விருது..!

இந்தாண்டு கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய சாதனையாளருக்கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வழங்கப்படவுள்ளது.

வருடந்தோறும் நவம்பர் மாதத்தில் கோவாவில் சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறும். இந்த விழாவை இந்திய அரசின் செய்தி ஒளிபரப்புத் துறை மற்றும் கோவா மாநில அரசு இரண்டும் இணைந்து நடத்துகின்றன.

வருடந்தோறும் இந்த விழாவின் துவக்க நாளில் இந்திய சினிமாவுக்கு மகத்தான பங்களிப்பு செய்த திரையுலக மேதைகளை கவுரவிப்பார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரவிக்க இருப்பதாக மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை என்று சொல்லலாம்..!

இந்த சர்வதேசத் திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதிவரையிலும் கோவாவில் நடைபெறவுள்ளது.

Our Score