“கார்த்திக் கரெக்ட்டா ஷூட்டிங்கிற்கு வர மாட்டாரேன்னு யோசிச்சேன்..”! – இயக்குநர் கே.வி.ஆனந்தின் பேச்சு..!

“கார்த்திக் கரெக்ட்டா ஷூட்டிங்கிற்கு வர மாட்டாரேன்னு யோசிச்சேன்..”! – இயக்குநர் கே.வி.ஆனந்தின் பேச்சு..!

‘அனேகன்’ திரைப்படத்தில் கார்த்திக் எப்படி நுழைந்தார் என்பதை அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழா மேடையில் இயக்குநர் கே.வி.ஆனந்த் சொன்னபோது அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது..!

IMG_0160 copy

“இந்தக் கதையை முடிவு செய்யும்போது இதுல ஒரு கேரக்டருக்கு யாரை போடலாம்னு ரொம்பவே யோசிச்சேன். என் அஸிஸ்டெண்ட்ஸ் எல்லாரும் கார்த்திக் ஸார்தான் இதுக்கு பொருத்தமா இருப்பாருன்னு சொன்னாங்க.. ஆனா எனக்கு அது சரியா படலை.. ஏற்கெனவே கார்த்திக் ஸார்கூட ‘சின்ன ஜமீன்’ படத்துல வொர்க் பண்ணியிருக்கேன். அந்தப் படத்துல நான் கேமிரா அஸிஸ்டெண்ட். அவர் கரெக்ட்டா ஷூட்டிங்கிற்கு வர மாட்டார். ஏதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டேயிருப்பாருன்னு யோசிச்சேன்.. பட்.. கேட்டுப் பார்க்கலாம்னு ஒரு ஐடியா.. சந்தேகத்தோடதான் கேட்டேன். பட்.. ஹி இஸ் வெரி நைஸ். பட்டுன்னு ஒத்துக்கிட்டாரு..” என்றார்.

Anegan Movie Stills

கே.வி.ஆனந்த் கார்த்திக்கிடம் படத்தில் நடிக்கும்படி எப்படி கேட்டார் என்பதை கார்த்திக்கே தனது பேச்சில் தெரிவித்தார்.

Anegan Press Meet Stills (35)

“எனது தயாரிப்பில், எனது இயக்கத்தில் ஒரு படம் செய்யணும்னு ஆசை.. அதுக்காக ஒரு ஹோட்டல்ல ரூம் போட்டு கதை எழுதிக்கிட்டிருந்தேன். அப்போதான் ஏஜிஎஸ் ஆபீஸ்லேர்ந்து எனக்கு போன் வந்துச்சு. கே.வி.ஆனந்த் ஸார் படத்துல நடிக்கணும்னு சொன்னாங்க. டைரக்டர் ஸார் கதை சொல்ல வந்தாரு. உக்காந்தவுடனேயே ‘நீங்க இந்தப் படத்துல நடிக்க மாட்டீங்க ஸார்.. ஆயிரம் ரூபா பந்தயம்’ என்றார் ஆனந்த். எனக்கு திக்குன்னு ஆயிருச்சு.. ‘அப்புறம் எதுக்கு இதெல்லாம்’ண்ணேன்..? ‘நீங்க கூப்பிட்டுட்டீங்க. கதையைச் சொல்ல வந்திருக்கேன். கதையையும் உங்க கேரக்டரையும் சொல்றேன். ஆனா நீங்க நடிக்க ஒத்துக்க மாட்டீங்க’ன்னு ஆனந்த் ஸார் திரும்பவும் உறுதியா சொன்னார். ‘மொதல்ல கதையைச் சொல்லுங்க.. அதை அப்புறம் பார்க்கலாம்’ண்ணேன். கதையைச் சொன்னார்.. நான் ஒண்ணும் சொல்லலை.. ‘ஓகே’ன்னுட்டேன். அவருக்கே ஆச்சரியம்.. எனக்கும்தான். ஆனால் கதையும், இதுல என்னோட கேரக்டரும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்த்து. அதுனால ஒத்துக்கிட்டேன். ஆனந்த் ஸாருக்குத்தான் ஆயிரம் ரூபா லாஸ்..” என்றார் கார்த்திக்.

இதோடு இல்லாமல் இயக்குநர் கே.வி.ஆனந்த் கூடுதலாக கார்த்திக்கை பற்றி சொன்ன சில விஷயங்களும் ஆச்சரியமானவைதான். “கார்த்திக் ஸார் படத்துல எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இன்வால்வ்மெண்ட்டோட நடிச்சுக் கொடுத்திருக்காரு.. எல்லாருக்கும் முன்னாடியே வந்திருவாரு. கடைசியாத்தான் போவாரு. மேக்கப் போட்டுட்டாருன்னா செட்டை விட்டு வெளில போகவே மாட்டாரு. அவரோட ஷாட்ஸ் எடுக்காதப்பகூட மத்தவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு பார்த்துக்கி்டடேயிருப்பாரு. ஒரு நாள்கூட அவரால ஷூட்டிங் டிலே ஆகலை.. அவரும் லேட்டா வரலை.. இந்த நிகழ்ச்சிக்குக்கூட அவர்தான் முதல் ஆளா வந்திருக்காரு. இந்த டெடிகேஷன்தான் அவரை இப்பவும் இண்டஸ்ட்ரில இருக்க வைச்சிருக்கு..” என்றார் ஆனந்த்.

ம்க்கும்.. இதே இன்வால்வ்மெண்ட்டை கார்த்திக் அண்ணன் ஹீரோவா நடிக்கும்போதே செஞ்சிருந்தா பல தயாரிப்பாளர்கள் தப்பிச்சிருப்பாங்களே..? பலருடைய சாபத்தையும் அவர் சம்பாதித்திருக்க மாட்டாரே..? இப்பவாவது உணர்ந்தாரே.. அதுவரைக்கும் சந்தோஷம்தான்..!

Our Score