‘இசைஞானி’   இளையராஜாவின் ஸ்டூடியோவை பார்த்து ரசித்த ரஜினி..!

‘இசைஞானி’   இளையராஜாவின் ஸ்டூடியோவை பார்த்து ரசித்த ரஜினி..!

சென்னை தி நகரில் ‘இசைஞானி’ இளையராஜா  சொந்தமாக இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ  கட்டி இசைப் பணிகள மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த்.

ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி  இருக்கிறார். பின்னர் இசை ஞானியுடன் நீண்ட நேரம்  பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் இன்றும் 2-வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இன்று இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்தவிதத்தையும் பொறுமையாக அமர்ந்திருந்து பார்த்து ரசித்துவிட்டுப் போயிருக்கிறார் ரஜினிகாந்த்.

Our Score