full screen background image

‘லிங்கா’ ஷூட்டிங்கிற்காக 22 ஆண்டுகள் கழித்து மங்களூர் சென்ற ரஜினி..!

‘லிங்கா’ ஷூட்டிங்கிற்காக 22 ஆண்டுகள் கழித்து மங்களூர் சென்ற ரஜினி..!

சூப்பர் ஸ்டார் ரஜினி தனது ‘லிங்கா’ படத்தின் இறுதிக் கட்ட ஷூட்டிங்கிற்காக நேற்று மங்களூர் வந்து சேர்ந்தார்.

ரஜினியின் வருகை காவல்துறையினருக்கு முன்பே தெரிவிக்கப்பட்டிருந்ததால் மங்களூர் விமான நிலையத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாம். நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ரசிகர்களும் திரண்டு வந்து ரஜினி வெளியில் வரும்போது “தலைவா தலைவா..” என்று குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

முன்னதாக விமானத்தில் இருந்து இறங்கி வி.ஐ.பி. லவுன்ச்சில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அமர்ந்திருந்த ரஜினி… விமான நிலைய சிப்பந்திகள் மற்றும் பயணிகளுடன் புகைப்படமும் சிலருக்கு ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்தாராம்..

விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, “இப்போ எனக்கு உடம்பு நல்லாயிருக்கு. 22 வருஷம் கழிச்சு இப்பத்தான் மங்களூர் வந்திருக்கேன்.. ஷிமோகா பக்கத்துல ஷூட்டிங்.. 21 நாள் நடக்கப் போகுது. அதுக்காகத்தான் வந்திருக்கேன்.. இந்தப் படம் என்னோட பிறந்த நாள் அன்னிக்கு நிச்சயமாக வெளிவரும்…” என்று சொல்லியிருக்கிறார்.

வழக்கம்போல தமிழகத்து மீடியாக்களை போலவே மங்களூரிலும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார்கள் கன்னட பத்திரிகையாளர்கள். “நீங்க அரசியலுக்கு வருவீங்களா?” என்பதுதான் அது. சூப்பர் ஸ்டாரும் வழக்கம்போல, “அது கடவுள் கைலதான் இருக்கு..” என்று சொல்லிவிட்டுப் போனாராம்..! 

இந்தக் கடவுள் எங்கதாங்க இருக்காரு..? 

Our Score