full screen background image

கலையரசன் மற்றும் காளி வெங்கட் கலக்கும் ‘ராஜா மந்திரி’

கலையரசன் மற்றும் காளி வெங்கட் கலக்கும் ‘ராஜா மந்திரி’

‘ராஜா மந்திரி’ காதல், நட்பு, நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, கோபம் என அனைத்தையும் கொண்ட படம். ஒவ்வொரு சாதாரணமான ஆண்கள் மற்றும் பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் காதல், உறவுகள், நட்பு, அழகான நினைவுகள் கொண்ட தொகுப்பே இந்த ராஜா மந்திரி படம். 

கிராமத்தின் பின்னணியில் உருவாகியிருக்கிறது. நகைச்சுவை, காதல், சண்டை, சந்தோசம் என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த குடும்ப படமாக உருவாகியுள்ளது.

இதன் இயக்குநரான உஷா கிருஷ்ணன் பிரபல இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’ போன்ற வெற்றி படங்களில் இவர் பணியாற்றி உள்ளார்.

படத்தின் நாயகன் ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன். நல்ல நடிகர் எனும் அங்கீகாரத்துடன் ‘டார்லிங் 2’, ‘கபாலி’ என முக்கியமான் படங்களை எதிர் நோக்கி இருக்கும் இவருக்கு ‘ராஜா மந்திரி’ ஒரு மைல் கல் படமாக இருக்கும். ‘காளி’  வெங்கட் படத்தில் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். இவரது கதாப்பாத்திரம் நமது வாழ்வில் நாம் சந்திக்கும் அன்றாட ஒரு மனிதனின் பிரதிபலிப்பாக இருக்கும்.  இவர்கள் இருவரும் நடித்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு வெகுவாக உயர்ந்துள்ளது.

பால சரவணன் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் ஒரு முக்கிய நகைச்சுவை  வேடத்தில் நடித்தியிருக்கிறார். ‘நாடோடிகள்’ கோபால், சரவணா சக்தி, காயல் பெரேரா, சூப்பர் குட் சுப்பிரமணி, வைஷாலி, ரவி, ராஜா பாண்டி, ஆனந்தி போன்ற திறமையான கலைஞர்களுடன்  இந்த படம் உருவாகியுள்ளது.

20-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷாலினி, கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மதியழகன் மற்றும் ரம்யா ஆகியோர்  தயாரித்துள்ளனர்.

சமீப காலங்களில் பல்வேறு படங்களை வாங்கி விநியோகம் செய்யும் ஆரா சினிமாஸ் இந்தப் படத்தையும் வெளியிடவுள்ளனர். படம் சம்மந்தப்பட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்து படம் வெளி வரத் தயாராக உள்ளது. 

Our Score