full screen background image

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் ‘ரெயின்போ’ திரைப்படம் துவங்கியது

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் ‘ரெயின்போ’ திரைப்படம் துவங்கியது
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ரெயின்போ.’
 
இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகவுள்ளது.
 
தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைக் களன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
 
‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தைத் தயாரிப்பதாக அறிவித்துள்ளது.
 
சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.
 
“வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக இந்த ‘ரெயின்போ’ இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ். ஆர். பிரபு.
 
Rashmika Mandanna sends her love, power to fans going through tough times
 
படத்தின் அறிமுக இயக்குநரான சாந்தரூபன் பேசும்போது, “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக இந்த ‘ரெயின்போ’ திரைப்படம் இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக் களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்..” என்றார்.
 
நடிகை ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல்முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக இந்த ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்..” என்று உற்சாகமாகக் கூறினார். 
 
‘ரெயின்போ’ படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதியன்று ஆரம்பமாகிறது.
Our Score