நடிகர் விஜய் தேவேரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ஹைதராபாத் இல்லத்தில் நடந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2018-ம் ஆண்டிலிருந்து விஜய் தேவேரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவின. இவர்கள் முதன்முதலாக இணைந்து நடித்த படம் கீதா கோவிந்தம் (2018). அதன் பின்னர் டியர் காம்ரேட் படத்திலும் இணைந்தனர். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றன.
சமீபத்தில், நியூயார்க் நகரில் நடைபெற்ற 43வது இந்தியா டே பேரேடில் இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்றனர். அதேபோல் பாரத் பியாண்ட் போர்டர்ஸ் எனும் நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்துகொண்டனர். பொதுவாக ஒரே இடத்தில் காணப்படாமல் தவிர்க்கும் இவர்கள், இம்முறை ஒன்றாகவே கலந்து கொண்டதால், நிச்சயதார்த்தத்துக்கு முன் சிக்னல் கொடுத்தார்களோ என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், 2024-ல் தங்களது சமூக வலைத்தளத்தில் இருவரும் “சிங்கிள் இல்லை” என்று பகிர்ந்திருந்தாலும், தங்கள் துணையின் பெயரை வெளிப்படுத்தவில்லை.
இப்போது இந்த திருமண நிச்சயத்தார்த்தம் செய்தியை கேள்விப்பட்டு திரையுலகத்தினர் பலரும் காதல் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா தற்போது ‘தம்மா’ படத்தில் ஆயுஷ்மான் குரானா, நவாஸுதீன் சித்திக், மற்றும் பரேஷ் ராவலுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படம் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகிறது. மேலும், ஷஹீத் கபூர் மற்றும் கீர்த்தி சனோனுடன் ‘காக்டெயில்-2’ படத்திலும் நடிக்கவுள்ளார். விஜய் தேவேரகொண்டா கடைசியாக ‘கிங்க்டம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.









