இந்தியத் திரையுலகில் ரெயில்களில் எடுக்கப்படும் படங்கள் ஹிட்டாவதாக ஒரு சென்டிமென்டே உலாவுகிறது. இதையொட்டி பல தமிழ், தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகள் பெருமளவு ரெயில்களிலும், ரயில்வே நிலையங்களிலும் நடக்கின்றன. பல நாட்கள் ரெயில்களை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.
அதற்கான அனுமதி கட்டணத் தொகையாக தற்போது ஒரு நாளைக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இப்போது அதில்தான் ஒரு சிக்கல் கிளம்பியுள்ளது.
ரயில்வே துறை வசூலிக்கும் இந்த அனுமதி கட்டணம், தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டு உள்ளதாம்.
வருகிற ஆகஸ்டு 1–ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது.
ஆகஸ்டில் அமல்படுத்தப்போகும் புது கட்டண விவரங்களையும் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
இதன்படி, ஆகஸ்டு 1–ம் தேதிக்கு பிறகு ரெயிலில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஒரு நாளைக்கு 4.50 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
ஒரு ரெயிலையே படப்பிடிப்புக்கு வாடகைக்கு எடுத்தால் 4 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல சீட், பெர்த்களுக்கும் படப்பிடிப்பு கட்டணம் இரு மடங்காகி உள்ளது.
இருக்கிற பிரச்சினையே பத்தலைன்னு இது வேறய்யா..?