full screen background image

நடிகை ராய் லட்சுமிக்குக் கிடைத்த பெருமை..!

நடிகை ராய் லட்சுமிக்குக் கிடைத்த பெருமை..!

ஒரு நாயகியை தேர்வு செய்துவிட்டு பின்பு ஹீரோவையும், மற்ற நடிகர், நடிகையரையும் தேர்வு செய்வதென்பது அந்த நாயகிக்கு மட்டும் தனித்து கிடைக்கும் ஒரு மரியாதை. இதற்கு முன்பு பல பெரிய நடிகைகளுக்கும் இதுபோல் நடந்துள்ளது. சமீபமாக எந்த நடிகைக்கும் இந்த ஸ்பெஷல் தேர்வு நடைபெற்றதில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகை ராய் லட்சுமிக்கு இந்த பெருமை கிடைத்துள்ளது.

மும்பையை சேர்ந்த ASA என்ற புதிய நிறுவனம், தமிழில் பிரம்மாண்டமான செலவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ராய் லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். இப்போதுவரையிலும் இவர் மட்டும்தானாம்.

மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘ராஜாதி ராஜா’, தமிழில் சுந்தர் சி-யுடன் ‘அரண்மனை’ என இந்த வருடம் ஹிட் படங்களில் நடித்துவிட்டார் ராய் லக்ஷ்மி. பல மலையாள வெற்றி படங்களில் நடித்ததின் மூலம் மாலிவுட்டில் ‘லக்கி ராய்’ என அழைக்கப்படும் ராய் லக்ஷ்மி, ‘அரண்மனை’யில் தனது கவர்ச்சியால் பல புதிய இயக்குநர்களையும் ஈர்த்துள்ளார் என்பதற்கு இந்த முதல் அழைப்பே சாட்சி..!

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

Our Score