சல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது

சல்மான்கானின் ‘ராதே’ திரைப்படம் குறைந்த வசூலையே பெற்றுள்ளது

நேற்று உலகம் முழுவதும் வெளியான சல்மான்கானின் ராதே’ திரைப்படம் மிகக் குறைவான வசூலையே பெற்றிருக்கிறது. மேலும் விமர்சன ரீதியாகவும் படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.

இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் வெளிநாடுகளில் மட்டும் வெறும் 6 லட்சம் டாலர்களை மட்டுமே வசூலாகப் பெற்றுள்ளது. 3 மில்லியன் டாலர்களை எதிர்பார்த்திருந்த படத்தின் விநியோகஸ்தர்கள் இதனால் பெரிதும் வருத்தமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் 40,000 டாலர்களும், ஆஸ்திரேலியாவில் 50,000 டாலர்களும் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ளது. சிங்கப்பூரில் இத்திரைப்படம் 12 ஸ்கிரீன்களில் திரையிட்டும் குறைவான வசூலையே பெற்றுள்ளது.

இதற்கு முன்பு சிங்கப்பூரில் வெளியான சல்மான்கானின் டபாங்-3’ மற்றும் ‘பாரத்’, ‘ஜீரோ’ ஆகிய படங்களின் வசூலில் 30 சதவிகிதத்தை மட்டுமே இந்த ‘ராதே’ படம் வசூல் செய்திருக்கிறதாம்.

வளைகுடா நாடுகளில் ஹிந்திப் படங்களுக்கு அதுவும் சல்மான்கானின் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பும், வசூலும் இருக்கும். ஆனால் இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் இதனாலேயே படத்தின் வசூலில் பெரும் ஓட்டை விழுந்துள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

வெளிநாடுகளைப் பொறுத்தமட்டில் சல்மான்கானின் முந்தைய படங்களான ‘டபாங்-3’ திரைப்படம் 5 மில்லியனையும், ‘பாரத்’ திரைப்படம் 6 மில்லியன் டாலர்களையும் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Our Score