ஜாலியான அப்பாவால் அவஸ்தைப்படும் மகனின் கதைதான் ‘ராஜாவுக்கு ராஜா’ திரைப்படம்..!

ஜாலியான அப்பாவால் அவஸ்தைப்படும் மகனின் கதைதான் ‘ராஜாவுக்கு ராஜா’ திரைப்படம்..!

அக்கூஸ் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.T.சையது  முகமது தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஜாவுக்கு ராஜா’.

படத்தில் ஜாலியான  அப்பாவாக  ‘மகாநதி’  சங்கர்,  அப்பாவின்  இம்சைகளால் அவஸ்தைப்படும் மகனாக V.R.வினாயக், வில்லியாக  ‘அங்காடி  தெரு’  சிந்து  நடிக்க கதாநாயகிகளாக  தியா,  வைஷ்ணவி,  மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – A.வசந்த்குமார், ஔிப்பதிவு – காசி விஷ்வா,  இசை – ஜெயக்குமார், பாடல்கள் – காவியன், வசனம் – தீபக் கண்ணதாசன், படத் தொகுப்பு – கேசவன் சாரி, நடனம் – ராதிகா, சண்டை இயக்கம் – S.R.முருகன்,  கலை இயக்கம் – பத்து, மக்கள் தொடர்பு – கோபி.

சந்தோஷமோ..! வேதனையோ..! கஷ்டமோ..! அனைத்தையும் ஜாலியாக கடந்து போகும் அப்பா, மகன் பற்றிய கதைதான் இந்த ‘ராஜாவுக்கு ராஜா’ திரைப்படம்.

சின்ன சின்ன தவறுகளைச் செய்து  அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை  பெறுவார்கள்.  மகனை  போலீஸில் சேர்த்துவிட்டால்  போலீஸ்  நம்மை  எதுவும் செய்ய மாட்டார்கள் என்று யோசித்து தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மகனுக்கு விருப்பமில்லாமத போலீஸ் வேலையில் சேர்த்துவிடுகிறார் அப்பா.

தைரியமே இல்லாத ஹீரோ சந்தர்ப்பவசத்தால் போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். ஒரு கட்டத்தில் ஒரு மிகப் பெரிய பெண் ரவுடியிடம் மாட்டிக் கொள்கிறார். அந்த பெண் ரவுடியிடமிருந்து ஹீரோ எப்படி தப்பிக்கிறார். அந்தப் பெண் ரவுடியை எப்படி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை காமெடிக்கும் கொடுத்து பக்கவான கமர்ஷியல் படமாக இதனை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான A.வசந்த்குமார்.  இவர்  இயக்குநர்  A.வெங்கடேஷிடம்  உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டுப்பாளையும், ஊட்டி, தேனி ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினருடன், நடிகர் தியாகராஜன், இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர்கள் ஏ.வெங்கடேஷ், பேரரசு, நடிகை சோனா, நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கவிஞர் சினேகன், பிரபல மலையாள நடிகர் பீமன் ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் தியாகராஜன் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.

Our Score