கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் K.M.சபி தயாரிப்பில், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராஜபுத்திரன்’.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக இளைய திலகம் பிரபு மற்றும் 8 தோட்டாக்கள் வெற்றி இருவரும் முதல்முறையாக இணைந்து இருக்கின்றனர்.
இவர்களோடு கன்னடத்து பிரபலம் கோமல் குமார் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக கிருஷ்ண பிரியா மற்றும் இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இசை அமைப்பாளர் நவ்பல் ராஜா இசை அமைக்க, ஒளிப்பதிவு – ஆலிவர் டேனி, வெற்றிப்பட இயக்குநர்களாகிய வசந்த் சாய், மற்றும் நந்தா பெரியசாமி, அவர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய மகாகந்தனின் விறு விறு இயக்கத்தில் இந்த ராஜபுத்திரன் படம் உருவாகியுள்ளது.
படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்விதமாக கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுத.. அனைவரையும் ஆட்டம் போட வைக்கும்விதமாக டிஆரின் வெண்கல குரலில் ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்து கதைக் களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ‘ராஜபுத்திரன்’ திரைப்படம்.









