கிராபிக்ஸ் வேலைகள் தாமதம் – ‘புலி’ திரைப்படம் அக்டோபர் 1-க்கு தள்ளி வைப்பு..!

கிராபிக்ஸ் வேலைகள் தாமதம் – ‘புலி’ திரைப்படம் அக்டோபர் 1-க்கு தள்ளி வைப்பு..!

‘புலி’ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

‘புலி’ திரைப்படம் அரசர்கள் காலத்து கதை என்பதாலும், போர்க்களக் காட்சிகள் இருப்பதாலும் இடைவேளைக்கு பின்பு வரும் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸில் அமைய வேண்டிய கட்டாயமாம்.

சென்ற மாதம் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் கிராபிக்ஸில் ஒரு குறிப்பிடத்தக்க எல்லையைத் தொட்டுவிட்டதால், அது போலவே ‘புலி’ படத்தின் கிராபிக்ஸும் பிரமிக்க வைப்பதாக இருக்க வேண்டும் என்று படத்தின் ஹீரோவான விஜய் விரும்பியிருக்கிறார்.

இதனாலேயே இதுவரையில் செய்திருந்த கிராபிக்ஸ் வேலைகளை தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் புத்தம் புதிய தொழில் நுட்பக் கலைஞர்களுடன் அந்த வேலையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

இந்தப் பணிகள் இன்னமும் முடிவடையாததால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி செப்டம்பர் 17 அன்று படம் வெளியாக வாய்ப்பில்லையாம். ஆகவே அக்டோபர் 1-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை அன்றைக்குள்ளும் முடியாவிட்டால் படம் தீபாவளிக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் படக் குழுவினர்.

Our Score