தான் நடித்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்குக்கூட வராத நடிகர் சந்தானம் நேற்று நடைபெற்ற ‘அசுரகுலம்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழாவுக்கு வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
விழாவில் நடிகர் சந்தானம் பேசும்போது. ”ஹீரோ சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் ஒரு அன்புக்காக வந்திருக்கிறேன்.
‘மார்க்கண்டேயன்’ படத்தின் ஷூட்டிங் ஒரு அத்துவானக் காட்டில் நடந்தது. வீரப்பன்கூட நுழைய முடியாத காடு அது. அங்கேயே டாய்லட் கட்டி மின்சாரம், ஏசி என்று எல்லா வசதிகளையும் எங்களுக்கு செய்து கொடுத்தார் மாஸ்டர் பெப்சி விஜயன்.
பத்து மாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல் மாடல் அவங்கவங்க அப்பாதான். என்னோட அப்பா குடிக்க மாட்டார். புகை பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ.
சபரிஷுக்கு நல்ல அப்பா கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்கு நாங்கள் என்றும் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள், என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்…” என்றார்.