full screen background image

OTT பிரச்சினையில் நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..!

OTT பிரச்சினையில் நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..!

நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா நடிப்பில் தான் தயாரித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேஸான் பிரைம் வீடியோ நிறுவனத்திற்கு ஒளிபரப்பு செய்ய அனுமதி கொடுத்தமைக்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், சூர்யா மற்றும் அவரைச் சார்ந்தோர்களின் திரைப்படங்களை இனிமேல் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்கள்.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்திருக்கும் தமிழ்ச் சினிமாவின் மூத்தத் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு, சூர்யா செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்றும், அது காலத்தின் கட்டாயம். தயாரிப்பாளர்கள் பெரும் பணத்தை முதலீடு செய்து அதில் நஷ்டப்பட முடியாது என்பதால் இந்த ஓடிடி தளங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும், சூர்யா மற்றும் அவரைச் சார்ந்தோர் மீது திரையரங்கு உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும். இனிமேல் அடுத்து ஓடிடி தளங்களுக்கு திரைப்படங்களை எப்படி கொடுப்பது என்பது அனைத்துத் தரப்பினரும் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம் எனவும் யோசனை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதன் முழு வீடியோ இங்கே :

 

Our Score