தயாரிப்பாளர் சங்கத்திற்கென தனியாக டிஜிட்டல் மாஸ்டரிங் யூனிட் செயல்பாட்டுக்கு வந்தது..!

தயாரிப்பாளர் சங்கத்திற்கென தனியாக டிஜிட்டல் மாஸ்டரிங் யூனிட் செயல்பாட்டுக்கு வந்தது..!

சமீபத்தில் தமிழகத்தில் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதற்கான டிஜிட்டல் சர்வீஸ் கட்டணங்களை குறைக்க வேண்டும் என்று கோரி வேலை நிறுத்தம் நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து தங்களுக்கென்று தனியாக ஒரு டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடரை உருவாக்கப் போவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவித்திருந்தனர்.

அதன்படியே சென்ற மாதம் சென்னையில் தங்களுக்கென தனியாக டிஜிட்டல் மாஸ்டரிங் யூனிட் மற்றும் அதனுடன் ஒரு சிறப்பு பிரிவியூ தியேட்டரையும் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அமைத்தது.

இந்த மாஸ்டரிங் யூனிட் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது பற்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

அனைத்து டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கான DCP பேக்கேஜ் உருவாக்க தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென தனியாக Mastering யூனிட் மற்றும் பிரிவியூ தியேட்டர் அமைக்கப்படும் என்று கடந்த 2018- ஏப்ரல் மாதம் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கூறியது.

இந்த அறிவிப்பு வெளியான 3 மாதங்களிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டு Mastering யூனிட்டை இயக்கவும் VPF Program-ஐ நடத்தவும் Microplex Global Private Limited என்ற தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 14-ம் தேதி Microplex – தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து உருவாக்கியிருக்கும் Mastering யூனிட் மற்றும் பிரிவியூ தியேட்டர் கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்டது.

IMG_0375

For Exhibitors / DSPs

1. ஹாலிவுட் Content விநியோக முறையைப் போலவே (Ex – யுனிவர்சல் பிக்சர்ஸ்)  தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் அனைத்து டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கென தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க Mastering யூனிட் மூலம் DCP பேக்கேஜ் மற்றும் KDM வழங்க முடிவு செய்துள்ளது.

திரையரங்குகளில் சொந்த Projector வைத்திருந்தாலும் இனி டிஜிட்டல் சேவை வழங்குனர்களிடம் அல்லாமல் தயாரிப்பாளார்கள் சங்க Mastering யூனிட்டிடம் இருந்து மட்டுமே Content நேரடியாக வழங்கப்படும்.

2. மேற்குறிய D மற்றும் E இரு வகை சினிமாக்களுக்கும் பொருந்தும். டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு தமிழ்த் திரைப்படங்களுக்கான DPX Source Content வழங்கப்படமாட்டாது. சேவைகளும் அதற்கான கட்டணங்களும் பின்வருமாறு.

3. VPF அறிமுகம் – ஒற்றை வழி வசூல் முறை.

கடந்த 13-வருடங்களாக டிஜிட்டல் சேவை வழங்குனர்கள், KDM மற்றும் Print Charges என்ற பெயரில் VPF கட்டணத்தை தயாரிப்பாளர்களிடம் நேரடியாக வசூலித்து வந்தது.

தற்போது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் VPF Program அறிமுகமாகிறது.

microplex-company

இதன்படி, தயாரிப்பாளர்களிடம் வசூலிக்கப்படும் தொகை மூன்று பிரிவாக பிரிக்கப்படும். (1) Mastering மற்றும் KDM  கட்டணம். (2) Delivery கட்டணம். (3) VPF கட்டணம்.

குறிப்பிட்ட விதிமுறைகளுக்குப்பட்டு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் சேவை வழங்குனர்களுக்கு உரிய Delivery கட்டணம் மற்றும் VPF கட்டணத்தை தயாரிப்பாளர்களிடம் வசூலித்துத் தரும்.

தயாரிப்பாளர்கள் TFPC மாஸ்ட்டரிங் யூனிட்டிலிருந்து கட்டணத்திற்குரிய ஒரு ரசீது மட்டுமே பெறுவார்கள்

D-Cinema ,VPF கட்டணத்தில் மாற்றம் இல்லை. அந்த தொகையை டிஜிட்டல் சேவை வழங்குனவர்களுக்கு பதிலாக TFPC மாஸ்டரிங் யூனிட் வசூலிக்கும்.

D-Cinema ரூ.2750 + GST (முதல் வாரம்) (TFPC மாஸ்ட்டரிங்  யூனிட் மற்றும் KDM கட்டணமாக பெறும். மீதம் ரூ.8250. தொகை டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் வசம் செலுத்த்ப்படும்.)

E-Cinema  ரூ.2000 + GST (முதல் வாரம்) (TFPC மாஸ்டரிங்  யூனிட் மற்றும் KDM கட்டணமாக பெறும். மீதம் ரூ.3000. டிஜிட்டல் சேவை வழங்குனர்களிடம் சேர்க்கப்படும். மேலும் தகவல்களுக்கு Rate Card –ஐ பாருங்கள்.

VPF சேவைக்கு தகுதி பெற, ஒவ்வொரு டிஜிட்டல் சேவை வழங்குனரும் குத்தகைக் காலம் முடிந்த பின் Projector உரிமை தியேட்டர் உரிமையாளர்களுக்கு சொந்தம் என்பதற்கான ஒப்பந்தத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் காண்பிக்கவேண்டும்.

microplex-company-1

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு :

1. இதுநாள்வரை படத் தயாரிப்பாளர்கள் DPX Source எடுத்துக் கொண்டு டிஜிட்டல் சேவை வழங்குனர்களின் அலுவலக கதவுகளை தட்ட வேண்டியிருந்தது. தற்போது TFPC Mastering unit –ல் DPS Source கொடுத்தல் போதும்.

டிஜிட்டல் சேவை வழங்குனர்கள் TFPC Mastering unit  மூலம்தான் DCP பேக்கேஜ்  மற்றும் KDM பெற முடியும். இதனால் தயாரிப்பாளார்கள் Content-ஐ  எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கதவாக தேடிச் செல்லும் அவசியம் இருக்காது. ஒற்றை வழிமுறையில் ஒரேயொரு பில் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

2.தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான பிரத்தியேக சிறப்பு சலுகையாக 32 சேனல்ஸ், Dolby ATMoms மற்றும் Barco 4K server மற்றும் Projector உடைய 50 இருக்கைகள் கொண்ட பிரிவியூ தியேட்டர் ரூ.5000 + GST கட்டணத்திற்கு கிடைக்கும்.

இந்த சலுகை 2019 ஜனவரி 17-ம் தேதி வரை (வழக்கமான கட்டணம்  ரூ.14999 + GST) நமது நிலையத்திற்கு CBFC சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Censor Footage Duration கடிதம் வழங்கவும் தியேட்டர் சிறப்பு சலுகை கட்டணத்தில் கிடைக்கிறது. இதை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

3. கூடுதலாக பட விளம்பரங்களுக்காக, TFPC உறுப்பினர்களுக்கு சலுகை தரப்பட்டுள்ளது. அதன்படி DCP பேக்கேஜ் உடன்படி Trailer-களையும் சேர்த்து கொடுக்கலாம். TFPC  Mastering யூனிட்டில் Trailer தரப்படுவதன் மூலம் இலவச விளம்பர வசதியைப் பெறலாம்.

Our Score