தலயின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் ஜனவரி 29-ம் தேதிக்கு தள்ளிப் போனதில் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது பற்றி அதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் கூறுகையில், “என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் பின்னணி இசை சேர்ப்பு, மிக்ஸிங் போன்ற பணிகள் இன்னமும் நிறைவடையவில்லை. தொழில் நுட்ப வேலைகளை அவசர, அவசரமாக முடித்து படத்தை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. எல்லா வேலைகளையும் நிதானமாக முடித்து வெளியிடவே விரும்பினோம். அதனால்தான் 2 வாரங்கள் தள்ளி வைத்து திரைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். வரும் ஜனவரி 29-ம் தேதி கண்டிப்பாக படம் ரிலீஸாகும்..” என்றார்.
Our Score









