full screen background image

ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கும் நடிகர் பிரபு தேவா

ஒரே நேரத்தில் மூன்று படங்களை தயாரிக்கும் நடிகர் பிரபு தேவா

நடனக் கலைஞர், நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் இப்படி தொடர்ந்து, திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்த பிரபுதேவா, இப்போது தயாரிப்பாளர் அவதாரத்தையும் கையில் எடுத்துள்ளார்.

‘பிரபு தேவா ஸ்டூடியோஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள தனது சொந்த பேனரில் முதற்கட்டமாக மூன்று படங்களைத் தயாரிக்க உள்ளார் பிரபு தேவா.

முதல் படத்தை பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவுள்ளார். இதில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ‘தின்க் பிக்’ நிறுவனத்தின் பங்குதாரரான நடிகை அமலாபால் விஜய் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராம்.

இரண்டாவது படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லட்சுமணன் இயக்கவுள்ளார். இதில் ஹீரோ ஜெயம் ரவியேதானாம். இதன் எடிட்டர் தற்போது வெளிவரவுள்ள ‘நைட் ஷோ’ படத்தின் இயக்குநர்  ஆண்டனி  என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது படத்தினை இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளர் விக்டர் இயக்குகிறார். படத்தின் பெயர் வினோதன். இந்தப் படத்தின் ஹீரோவாக ‘நைட் ஷோ’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வருண் நடிக்கப் போகிறார். இவர் மறைந்த நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் அமரர் ஐசரிவேலனின் பேரன்.  உடல் ஊனமுற்ற மற்றும் மனநலக் குறைபாடு உள்ள இளைஞனின் வாழ்க்கைதான் இந்தப் படமே. இதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்களுக்கு இமான் இசையமைக்கிறார்.

IMG_1828

படக் குழுவினரை அறிமுகப்படுத்தி நடிகர் பிரபுதேவா பேசும்போது, “வித்தியாசமான சிறப்பான கதைகளையும்.. வெற்றிக் கூட்டணிகளையும்.. வெற்றி பெரும் என்ற நம்பிக்கையைத் தரும் கூட்டணிகளையும்தான் என் தயாரிப்புக்காக தேர்ந்தெடுத்துளேன்.

நடிக்க போனால் ஷூட்டிங் சமயத்தில்தான்  டென்ஷன் வரும். டைரக்ஷன் செய்யப் போனால் டென்ஷன். ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்குக்கு போனால் அங்கும் டென்ஷன்தான். ஆனால் படம் தயாரிப்பு என்று அறிவிப்பு கொடுக்கும்போதே டென்ஷன் வந்திருச்சு. ஆனாலும் இந்தத் தயாரிப்புப் பணியை முழுமையா செய்யறதா முடிவு பண்ணிட்டேன்.

சர்வதேசத் தரத்தில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை எங்களது ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இப்போது முதலில் தமிழில் ஆரம்பிக்கிறோம். ஏன்னா இதுதான் நமக்கு நல்லா தெரிஞ்ச இடம். அப்புறம் போகப் போக தமிழ் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். நானும் என் இயக்கத்தில் ஒரு படம் எடுப்பேன் ஆனால் அது இப்போது இல்லை.

தமிழ் திரையுலகில் திறமைக்கு பஞ்சமில்லை. தேர்ந்த,  அனுபவமுடைய பலர் இங்கே இருக்காங்க. பல சிறந்த கலைஞர்கள், படைப்பாளிகளெல்லாம் மொழி,  மாநிலம் என்று குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று  தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை இந்த பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிச்சயம் கொடுக்கும்..” என்றார் பிரபுதேவா.

ஓகேண்ணே.. இங்க சம்பாதிச்சதை இப்படி எடுத்து இங்கேயே கொடுத்தால் அது தமிழ்த் திரையுலகத்திற்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடனாக இருக்கும்..!

உங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறோம் பிரதர்..!

Our Score