full screen background image

ராஜமெளலியின் இயக்கத்தில் அஜீத்..?

ராஜமெளலியின் இயக்கத்தில் அஜீத்..?

‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பல மாநில ஹீரோக்களும் இயக்குநர் ராஜமெளலியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

rajamouli-1

முதல் கிசுகிசுவே ரஜினியுடன் இணைத்து வந்தது. அது இப்போதைக்கு இல்லை என்று மெளலியே சொல்லிவிட்டார். அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் ஆசைப்படுவதாக செய்தி வர.. ‘இப்போதைக்கு அப்படியொரு எண்ணமே இல்லை’ என்றார் மெளலி.

இப்போது தனது கவனம் முழுக்க ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தை நிறைவு செய்வதிலேயே இருப்பதாகச் சொல்கிறார் ராஜமெளலி.

ஆனாலும் அதற்கடுத்த படத்தை மகேஷ்பாபுவும் இணைந்து செய்ய ஆசையுடன் இருப்பதாக ராஜமெளலியே சொல்லியிருப்பதால் அதற்கடுத்த்து மகேஷ்பாபு படம்தான் என்பது உறுதியாகிவிட்டது.

அதற்குப் பின் என்ன என்று இப்போதே கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள் திரையுலக கிசுகிசு நாயகர்கள். வசமாகச் சிக்கிவிட்டார் ராஜமெளலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத்.

rajamouli-father

சமீபத்தில் ஒரு தெலுங்கு பத்திரிகையொன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் ‘பாகுபலி’க்கு பின்பு தன்னுடைய கதை ஒன்றை ராஜமெளலி இயக்கப் போவதாகவும் அது தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் என்றும் சொல்லியிருக்கிறார்.

“ஹீரோக்கள் யாராக இருக்கும்..?” என்ற கேள்விக்கு “தமிழில் அஜீத், தெலுங்கில் அல்லு அர்ஜூனை மனதில் வைத்து நான் கதை எழுதியுள்ளேன். ஆனால் உண்மையில் யார் நடிப்பார்கள் என்பது என் கையில் இல்லை..” என்று சொல்லியிருக்கிறார். “2017 இறுதியில் அந்த தமிழ், தெலுங்கு படம் வெளியாக வாய்ப்புண்டு..” என்கிறார் விஜயேந்திர பிரசாத்.

சமீபத்தில் ரம்ஜான் தினத்தன்று வெளியாகி இப்போதுவரையிலும் 400 கோடியை வசூல் செய்திருக்கும் சல்மான்கானின்  ’பஜ்ராங்கி பாய்ஜான்’ படத்தின் கதாசிரியரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது நிச்சயம் சாத்தியமான விஷயம் என்றால் 2017-ம் வருடம் ‘தல’ அஜீத்திற்கு ஸ்பெஷலான வருடமாக இருக்கலாம்.

Our Score