நம் திரைப்படத் துறையை சேர்ந்த அனைவருக்கும் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் சமீபகாலமாக நமது திரைப்படங்கள் ஹாலிவுட்டிலேயே தயாரிக்கப்படுவதும் நடந்து வருகிறது.
மறைந்த பிரபல நடிகர். M.R.ராதாவின் கொள்ளுப் பேரனும், மறைந்த நடிகர் M.R.R.வாசுவின் பேரனுமான பிரபாகரன் ஹரிஹரன் தன்னுடைய சொந்த நிறுவனமான Haricane Studios சார்பில் ஒரு ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கவுள்ளார்.
“நான் பரம்பரையாக சினிமா தொழிலிருந்து வந்ததாலோ என்னவோ எனக்கு சர்வதேச அளவில் படம் தயாரித்து புகழ் பெறவேண்டும் என்ற ஆசை அதிகம். அந்த ஆசையின் உந்துதல்தான் என்னை இவ்வளவு தூரம் பயணிக்க வைத்தது…” என்றார் பிரபாகரன் ஹரிஹரன்.
‘Bremen Town Musicians’ என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் இந்த அனிமேஷன் படத்தின் பட்ஜெட் 45 மில்லியன் டாலர்ஸ்.
சமீபத்தில் இது சம்பந்தமாக ஹாலிவுட் நிறுவனத்துடன் சந்திப்பு நடத்திய Haricane studios நிறுவனத்தின் முதன்மை அதிகாரி திவ்யா வேணுகோபால் கூறும்போது, “நான் பிரமிப்பாக பார்த்து வியந்த ஹாலிவுட் நிறுவனங்களுடன் தொழில் நிமித்தமாக சந்திப்பு நடத்தியதே இளைஞர்களான எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். எங்களுக்கு அவர்கள் தந்த ஊக்கமும், உற்சாகமும் உலகத்தரத்தில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்தது.
இந்த படம் அடிப்படையில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருப்பதால் உலக அளவில் புகழ் பெற்ற இந்திய இசயமைப்பாளரிடமோ, அல்லது அதற்கு நிகரான இன்னொரு இசையமைப்பளரிடமோ பேசவுள்ளோம்.
Haricane Studios நிறுவனத்தினர் ‘woolfell’ என்கிற இன்னொரு அனிமேஷன் படத்தையும் தயாரிக்கவுள்ளனர். இப்படத்தில் பிரபல இந்திய நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர். இந்த இரு படங்களும் உலக அரங்கில் இந்திய தொழிழ் நுட்ப கலைஞர்களின் திறமையை பறைசாற்றும்…” என்றார்.