‘பூஜை’ படத்திற்கு அதிகப்படியான தியேட்டர்கள் கிடைத்துள்ளன..!

‘பூஜை’ படத்திற்கு அதிகப்படியான தியேட்டர்கள் கிடைத்துள்ளன..!

வரும் தீபாவளியன்று ‘கத்தி’ படம் ரிலீஸாவதால் அன்றைக்கு வேறு எந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்காது என்றே விஜய் ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

ஆனால் தியேட்டர்காரர்களின் கருத்தோ வேறு மாதிரியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே விஷாலின் ‘பூஜை’ படத்திற்கு 425 தியேட்டர்கள் கிடைத்திருக்கிறதாம். இன்றுதான் அதற்கான இறுதி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

425 என்பது நிச்சயமாக மிகப் பெரிய சாதனைதான்.. பாண்டிய நாடு தந்த வெற்றியை ருசித்த தியேட்டர்காரர்கள் நம்பிக்கை வைத்து அதிக தியேட்டர்களை ஒதுக்கித் தந்திருக்கிறார்கள் என்பது புரிகிறது.. தெரிகிறது..!

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score