full screen background image

‘கத்தி’ படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு..!

‘கத்தி’ படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு..!

‘கத்தி’ படத்திற்கு இப்போது ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் வரும் தீபாவளியன்று அந்தப் படத்தை முழு மூச்சாக அதிக தியேட்டர்களில் வெளியிடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதுவரையில் தன்னுடைய படங்கள் வெளிநாடுகளில் ரிலீஸான எண்ணிக்கையைவிடவும் ‘கத்தி’ படத்தின் ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்பது விஜய்யின் உத்தரவாம்.

தமிழ்நாட்டில் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்கள் ‘கத்தி’க்காக கிடைத்துள்ளன.

சென்னை-செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் 200 தியேட்டர்களில் வெளியாகிறது. கோவையில் 80 தியேட்டர்கள், மதுரையில் 55 தியேட்டர்கள்.. திருநெல்வேலி, கன்னியாகுமரி- 20 தியேட்டர்கள். சேலம் ஏரியாவில் 60 தியேட்டர்களில் வெளியாகிறது. விஜய்க்கு எப்போதும் தனி மவுசு உள்ள கேரளாவில் 120 தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன என்று சினிமா வட்டாரத் தகவல்கள் சொல்கின்றன.

மேலும், வெளிநாடுகளில் வட அமெரிக்காவில் 250 ஸ்கிரீன்கள், இங்கிலாந்து – 70 தியேட்டர்கள், பிரான்ஸ்- 25 தியேட்டர்கள், மலேசியாவில் 120 தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

‘கத்தி’ படத்திற்கு தமிழகத்தில் கிடைத்த எதிர்ப்பை மனதில் வைத்து வெளிநாடுகளில் அதிக அளவு ரிலீஸ் செய்து எதிர்ப்பாளர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று படக் குழுவினர் நினைத்திருக்கிறார்களாம்..

நடக்கட்டும்.. நடக்கட்டும்..!

Our Score