விஷாலின் அடுத்தப் படமான ‘பூஜை’ படத்தின் ஷூட்டிங் நேற்றைக்குத் துவங்கிவிட்டது.
இந்தப் படத்தில் விஷாலுடன் முதல்முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருக்கிறார். முதல் நாளான நேற்றே ஹீரோயின் ஸ்ருதிஹாசனுடன், இயக்குநர் ஹரி மோதல் என்ற பரபரப்புச் செய்திகள் கிளம்பிவிட்டன.
ஷாட் பிரேக்கில் ஸ்ருதி பெரும்பாலும் செல்போனில் இணையத்தை மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த ஹரி டென்ஷனாகி ஸ்ருதியை திட்டிவிட்டதாகவும், ஸ்ருதி தான் அப்படித்தான் இருப்பேன் என்று சொல்லவிட்டதாகவும் காத்து வாக்கில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து இந்தச் செய்தியை அமுக்க ஒரே வழி படம் பற்றி நாமளே நியூஸ் கொடுப்பதுதான் என்று நினைத்து முதல் நாளில் எடுத்த புகைப்படத்தை இன்று ரிலீஸ் செய்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
ARTISTES LIST
விஷால்
ஸ்ருதி ஹாசன்
சத்யராஜ்
ராதிகா
சூரி
முகேஷ் திவாரி
ஜெயபிரகாஷ்
தலைவாசல் விஜய்
ஆர்.சுந்தர்ராஜன்
மனோபாலா
சந்தானபாரதி
சார்லி
கராத்தே ராஜா
பிளாக் பாண்டி
சித்தாரா
அபிநயா
கெளசல்யா
ரேணுகா
ஐஸ்வர்யா
TECHNICIANS LIST
சண்டை பயிற்சி – கனல் கண்ணன்
நடனம் – பிருந்தா, தினேஷ், பாபா பாஸ்கர்
கலை – கே.கதிர்
பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்
இசை – யுவன் சங்கர் ராஜா
எடிட்டிங் – வி.டி.விஜயன்
ஒளிப்பதிவு – பிரியன்
தயாரிப்பு நிறுவனம் – விஷால் பிலிம் பேக்டரி
தயாரிப்பாளர் – விஷால்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஹரி
“இனிமேல் மூச்.. படம் முடியறவரைக்கும் கிசுகிசுவெல்லாம் எழுதக் கூடாது.. படத்தோட ஸ்டில்ஸ் வேணும்னு கேட்டீங்கன்னா, கைல இருக்குறதை அப்பப்போ கொடுத்திருவோம்.. எதுனா படத்தைப் பத்தி எழுதி, பிரச்சினையை கிளப்பாதீங்க பாஸ்.. ப்ளீஸ்.. நிம்மதியா ஷூட்டிங் எடுக்க விடுங்க..!
இப்படிக்கு
அப்பாவி தயாரிப்பாளர்
விஷால்..!”