full screen background image

ஸ்பைடர்மேன் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த அவமரியாதை..!

ஸ்பைடர்மேன் பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த அவமரியாதை..!

பத்திரிகையாளர்கள் என்றோர் தனி இனமுண்டு. அவர்களுக்கு அவர்களே அதிகாரம் படைத்தவர்கள் என்ற நினைப்பில் மூணு லாரி மண்ணள்ளிப் போட்டார்கள் ஸ்பைடர்மேன் படத்தின் விநியோகஸ்தர்களான தமிழகத்தின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தினர்..

‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடந்தது. படத்தில் வில்லனுக்கு டப்பிங் குரல் கொடுத்திருந்த நடிகர் சுப்பு பஞ்சுவும் வந்திருந்தார்.

முதலில் ‘ஸ்டைபர்மேடன்’ படத்தின் 3-டி இல்லாத வெர்ஷன் திரையிடப்பட்டது. இதில் டிரெயிலரும், படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளும் திரையிடப்பட்டன.

இதன் பின்னர்தான் கதை சுந்தரகோலமானது. “இனிமேல் நீங்க பார்க்கப் போகும் 3-டி வெர்ஷன் மிக முக்கியமானது. இந்தக் காட்சிகளை வெளியில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் லீக் செய்துவிடக் கூடாது என்பதில் எங்களது நிறுவனம் கண்ணும், கருத்துமாக உள்ளது. எனவே மீடியா பெர்ஸன்ஸ் ப்ளீஸ்… தங்களது செல்போனை இங்கே முன்னாடி வைச்சிட்டு படம் முடிஞ்சதும் திரும்ப எடுத்துக்குங்களேன்..” என்றார் இனிக்க இனிக்க பேசிய சோனி பிக்சர்ஸ் சார்பில் வந்திருந்த ஒரு பெண்மணி .

Amazing Spiderman 2 Press Meet (2)

எதிர்த்துக் குரல் கொடுப்பதா..? அல்லது பேசுவதா..? இல்லாட்டி பேசாமல் அவர்கள் சொல்வதை செய்வதா என்கிற தயக்கத்தில் மீடியாக்காரர்கள் இருக்க.. திரும்பத் திரும்ப பாராளுமன்றத்தில் சபாநாயகர் மீராகுமார் ‘ப்ளீ்ஸ்.. ப்ளீஸ்..’ என்று கெஞ்சுவதைபோல அந்த அம்மணி வாய்ஸ் கொடுத்துக் கொண்டேயிருக்க.. முதல் போனை பி.ஆர்.ஓ.வே சமர்ப்பிப்பதை பார்த்தவுடன் அடக்கத்துடனும், சபை நாகரிகம் கருதியும் அதன்படியே சமர்த்துப் பிள்ளையாக தங்களது செல்போன்களை ஸ்கிரீனுக்கு முன்பாக இருந்த மேடையில் வைத்துவிட்டுச் சென்று படம் பார்த்தார்கள் பத்திரிகையாளர்கள்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே. வந்திருந்தவர்களும் அவர்கள் மட்டுமே.. படத்தினை ஷூட் செய்திட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாலே போதுமானதுதான்.. இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் சினிமா தொழிலில் இருக்கும் தொழிலாளர்களைப் போலத்தான். அவர்களுக்கும் சினிமா தொழிலின் கஷ்ட, நஷ்டங்கள் தெரியும்.. புரியும்..

மற்றவர்களைப் போல அவர்களையும் பாவித்து உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. செல்போனை கொடுத்திட்டுப் போய் படத்தைப் பாருங்கள் என்று சொல்வது அவமரியாதையான செயல். ஆனால் இதை யார் அவர்களுக்கு உணர்த்துவது..?

அப்புறமும் ஏண்டா படத்தைப் பார்த்திட்டு எந்திரிச்சு வந்தன்னு கேக்குறீங்களா.. மானம், ரோஷமெல்லாம் பார்த்தா இந்தக் காலத்துல பொழப்பை ஓட்ட முடியாது பாஸ். அதுனாலதான்.!

இதுக்கே இப்படின்னா.. சென்ற மாதம் வேறொரு நாளில் நடந்த இதே படத்தின், இதே மாதிரியான பிரஸ் மீட்டில் செல்போன்களை வெளியிலேயே வாங்கி வைத்துக் கொண்டுதான் தியேட்டருக்குள்ளேயே மீடியாக்களை அனுமதித்தார்கள்.. அதுக்கென்ன சொல்றீங்க..?

அப்பவே பொங்காத நாங்க, இப்பவா பொங்கப் போறோம்..?

இதெல்லாம் மீடியா அரசியல்ல சகஜமப்பா..!

Our Score