‘பீஸ்ட்’ படத்தின் நடன ரிகர்சலில் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்

‘பீஸ்ட்’ படத்தின் நடன ரிகர்சலில் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொண்டார்

நடிகர் விஜய்யின் 65-வது படமான ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே ஜார்ஜியா நாட்டில் 25 நாட்கள் நடைபெற்றது. கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக அந்தப் படப்பிடிப்பை நடுவிலேயே முடித்துவிட்டு தாயகம் திரும்பிவிட்டார்கள்.

தற்போது மீண்டும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத் துவக்கத்தில் துவங்கவுள்ளது. இந்த முறை வெளிநாட்டுக்குப் போகாமல் சென்னையிலேயே அதற்கான செட்டுகளை போட்டுள்ளார்களாம். இந்த செட்டுகள்கூட கொரோனா லாக்டவுன் காலத்திலேயே போடப்பட்டுவிட்டது.

இந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் விஜய்யும், நாயகியான பூஜா ஹெக்டேவும் நடனமாடும் பாடல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளனவாம். இதற்கான முஸ்தீபுகள் கடந்த மாதமே தயாராக இருந்தன. ஆனால் அரசு தடை விதித்திருந்ததால் அதையும் செய்ய முடியவில்லை.

இப்போது தளர்வுகள் அறிவித்துவிட்டபடியால் மீண்டும் பாடல் காட்சிகளுக்கான ரிகர்சலை துவக்கியிருக்கிறார்கள். இதில் நாயகி பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டிருக்கிறார்.

விஜய் படம் என்றாலே நடனம் சிறப்பாக இருக்கும். நடனம் சிறப்பு என்றால் அது கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கும். ரிகர்சல் இல்லாமல் அதை செய்வது மிகக் கடினம். எனவேதான் விஜய்யின் படங்களுக்கு மட்டும் ரிகர்சல் நடப்பது வழக்கம். அதேபோல்தான் பூஜா ஹெக்டேவும் ரிகர்சலில் கலந்து கொண்டிருக்கிறாராம்.

 
Our Score