full screen background image

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் இயக்குநர் நெல்சன்

மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் இயக்குநர் நெல்சன்

மீண்டும் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கப் போவதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

படத்தின் டிரெயிலர் வெளியானபோதே இத்திரைப்படம் ‘கூர்க்கா’ என்று முன்னர் வந்த தமிழ்ப் படம், மற்றும் பல்வேறு ஹாலிவுட் படங்களையும் காப்பியடித்த கதையில் உருவாகியிருப்பதாக செய்திகள் பரவத் தொடங்கின.

சமூக வலைத்தளங்களில் எழுந்த இந்த. விமர்சனங்களையும் தாண்டி இத்திரைப்படத்திற்கான முன் பதிவு வரலாறு காணாதவகையில் சாதனை படைத்தது. தொடர்ந்து வசூலும் நல்ல நிலையில் இருந்தாலும், படம் வெளியான இரண்டாவது நாளே படம் மீதான மவுத் டாக்கினால் கூட்டம் குறையத் துவங்கியது.

இதே நேரம் கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப்-சேப்டர்-2’ படம் பிரமாதமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்க.. அந்தப் படத்திற்குக் கூடுதல் தியேட்டர்களும் இப்போது கிடைத்திருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீஸ்ட்’ படத்தைப் பொறுத்தவரையில் ஆக்சன் படமாக மட்டுமே அது இருப்பதாலும், நெல்சனின் வழக்கமான நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதையும், குடும்பத்தினர் பார்க்க விரும்பும் சென்டிமெண்ட் காட்சிகளும் இந்தப் படத்தில் இல்லை என்பதால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாயின.

இந்த நேரத்தில் படம் வெளியான அடுத்த நாளே நெல்சனை அழைத்த நடிகர் விஜய்.. “படத்தின் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் மறந்திருங்க.. இதில் என்னுடைய தவறும் இருக்கிறது…” என்று சொல்லி இயக்குநர் நெல்சனை சமாதானம் செய்திருப்பதாகத் தகவல். கூடவே “அடுத்து என்னோட இன்னொரு படத்தையும் நீங்கதான் இயக்கணும்” என்று நெல்சனிடம் சொல்லியிருக்கிறார் விஜய்.

இதையடுத்து குஷியான இயக்குநர் நெல்சன், விஜய்யுடன் இணைந்து இன்னொரு படத்தையும் இயக்கப் போவதாக தனது சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாம் பாகமா அல்லது புத்தம் புதிய படமா என்பது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

நெல்சனின் இந்தச் செய்தி அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், விஜய்யின் ரசிகர்களுக்கு ‘மறுபடியுமா?’ என்ற அதிர்ச்சியைத்தான் தந்துள்ளது.

 
Our Score