full screen background image

பியர் பிரேமா கல்யாணம் – சினிமா விமர்சனம்

பியர் பிரேமா கல்யாணம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் இளன், சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் மற்றும் பலரும் நடிச்சிருக்காங்க.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஹீரோவா நடிச்சு, இயக்கியிருப்பது இளன். ஸ்ரீநிதி சாகர் தயாரிச்சிருக்காங்க. இந்த படத்தை நெட்ஃபிளிக்ஸ்(Netflix) நிறுவனம் தயாரித்துள்ளது. 

கதை, திரைக்கதை – நிவேதிதா போகங்கர், கூடுதல் திரைக்கதை, வசனம் – இளன், ஹரிஷ் ஒளிப்பதிவு – டி.ஓ.பி. தினேஷ் கே. பாபு, படத் தொகுப்பு – பிரதீப் இ.ராகவ்.

இந்தப் படம் இன்றைய யூத்துகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான திரைக்கதையில் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தோட ஹீரோ இளன், எம்.எஸ். பாஸ்கர் – கீதா கைலாசம் தம்பதிகளோட மகன். ஒரு ஐடி கம்பெனில பொட்டி தட்டிட்டு இருக்காரு. ஆனா இப்ப வயசு வந்தும் அவருக்கு கல்யாணம் ஆகல. நிறைய பெண்கள் அவரை ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. இவரு மேட்ரிமோனில எல்லாம் தேடிப் பார்க்கிறாரு, இன்னும் பொண்ணு கிடைக்கல. இந்த நேரத்துல கடைசியா ஒரு பொண்ணு அவரைப் பார்க்க ரெடியா இருக்காங்க.

இளனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர், ரொம்ப கண்டிப்பானவரு. சிரிக்கக்கூ மாட்டாரு. இறுக்கமான முகத்தோடயே வீட்ல எல்லாரையும் அதட்டுவாரு. அவருக்கும் பையனுக்கும் நடுவுல கொஞ்சம் பிரச்சனை. அவங்க அம்மா இவங்க ரெண்டு பேருக்கும் இடையில தூதுவர் மாதிரி போஸ்ட்மேன் வேலை பாக்குறாங்க.

அப்பதான் சொல்றாங்க, ‘இன்னைக்கு ஒரு பொண்ணு உன்ன பாக்க வந்துருக்கு, போய் பாத்துட்டு வா’ன்னு. இளன் அம்மா சொன்ன பொண்ணைப் பார்க்கப் போகும்போது, ஒரு கலர் டிரஸ்ல வர்றேன்’ அப்படின்னு சொல்லிருந்துச்சு. அதே டிரஸ்ஸோட சான்வி மேக்னா அங்க உக்காந்துருக்காங்க. ஆனா இவரைப் பார்க்க வந்த பொண்ணு அவங்க இல்ல. இதை இளனுக்குத் தெரியாது.

அவங்கள பாத்தவுடனே கொஞ்சம் மயங்கி, அவங்கள படம்லாம் வரைஞ்சு குடுத்து, அவங்கதான் நம்ம பார்க்க வந்த பொண்ணுன்னு நெனச்சு பேச ஆரம்பிக்கிறாரு இளன்.

அப்போ நிஜமாகவே இவரைப் பார்க்க வந்த பொண்ணு வந்து நிக்குது. இளனுக்கு பார்த்தவுடனேயே அந்தப் பொண்ணை புடிக்கல. அதனால ஏதோ ஒண்ணு சொல்லி தட்டிக் கழிச்சிட்டு எஸ்கேப் ஆகுறாரு.

ஆனா இப்ப இந்த சான்வி மேக்னா யாருன்னு தேடிப் பார்த்தா, அவங்க இன்ஸ்டாகிராம்ல மிகப் பெரிய ஃபாலோயர்ஸ்லாம் வெச்சிருக்குற மிகப் பெரிய பிரபலம். இவர் இளன் தான் பார்க்க வந்த பொண்ணுகிட்ட வேண்டா வெறுப்பா பேசுனதை, ஒளிஞ்சு மறைஞ்சிருந்து வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம்ல போட்றாரு.

இளன் அந்தப் பெண்ணிடம் ‘என் வீட்டுக்கு அடங்கி இருப்பியா? சமைக்கத் தெரியுமா?’ன்ற மாதிரி ஆணாதிக்கத்தனமான கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

அது வெளியில் பரவி பயங்கரமா வைரல் ஆகிறது. தனக்கு இப்படி ஒரு கெட்ட பேர் வந்துருச்சே என்று சொல்லிட்டு சான்வி மேக்னாவை தேடிப் போய் சண்டை எல்லாம் போடுறாரு இளன். அந்த சண்டை இவங்களுக்குள்ள ஒரு லவ்வா மாறிருது.

இப்போ சான்வி மேக்னா வீட்ல அவங்க அப்பா இளங்கோ குமரவேல் அம்மா, ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேலோட அப்பாவும், இளனோட தாத்தாவுமான செந்திலும் உள்ளனர். செந்தில் வீல்சேர்லதான் எப்பவும் இருப்பாரு.

சான்வி மேக்னாவும், இளனும் லவ் பண்ணி காதல வளத்துக்குறாங்க. இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க இரு விட்டார் முடிவு செய்து திருமணம் நடக்கிறது.

இந்த நேரத்துல மணப் பொண்ணு சான்வி மேக்னா, ‘இப்ப நான் கல்யாணம் பண்ணிட்டு இவங்க வீட்டுக்கு வந்துட்டா… எங்க அம்மா, அப்பா, தாத்தாவை யார் பாத்துக்குறது?’ அப்படின்னு கிறுக்குத்தனமா யோசிக்குது.

அதனால என்ன பண்ணுதுன்னா… கல்யாண மண்டபத்துல இருந்து குடுகுடுன்னு எஸ்கேப் ஆயிடுது பின்னாடியே மாப்பிள்ளைக்காரன் துரத்திட்டு ஓடுறான். கடைசியா தேடி கண்டுபிடிச்சா, அந்த புள்ள போய் அவங்க வீட்ல போய் உக்காந்துருது.

“எனக்கு அங்க போக விருப்பம் இல்ல; நான் இருந்தா இங்கதான் இருப்பேன். அவன வேணா இங்க வர சொல்லுங்க” என்கிறார் சார்லி.

மாப்பிள்ளை இளனும், ‘சரி வேற வழி இல்ல; அவகூட வாழணுமே’ அப்படிங்கிறதுக்காக பொட்டி படுக்கையை தூக்கிட்டு மாமனார் வீட்டுக்கு வருகிறார்.

இப்ப இளன் மாமனார் வீட்ல வந்திருக்காரு. இளன் வேலை தேடுகிறார். கிடைப்பதாக இல்லை.

கிடைக்கும் அப்படின்னு நினைச்ச இடத்துல கிடைக்கலன்றப்ப இவருக்குரிய மரியாதை வீட்ல சுத்தமா போயிருச்சு.

அதுக்கப்புறம் வீட்ல ஏவலாள் வேலை, வேலைக்காரன் வேலையெல்லாம் செய்ய ஆரம்பிக்கிறார். இதை அவங்க ஃபேமிலி, அவங்க அப்பா எம்.எஸ். பாஸ்கர், அம்மா கீதா கைலாசம் எல்லாம் பாத்துட்டு அழுகுறாங்க.

இப்ப தன் மகனை கூட்டிட்டு போயிரலாமா? அல்லது இங்கேயே இருக்கலாமா? அல்லது இவங்களுக்கு தனிக்குடித்தனம் வைக்கலாமா? அப்படின்னு சொல்லி அவங்களுக்குள்ளேயே ஒரு பெரிய கன்க்ளூஷன்.

ஒரு கட்டத்துல எழன் யோசிக்கிறாரு. தான் இந்த வீட்ல அடிமையா இருக்கிறோம்…. வேலைக்காரனா இருக்கிறோம்னு நெனச்சுட்டு அம்மா வீட்டுக்கு வந்து படுத்தேவிடுகிறார்.

அதுக்கப்புறம் என்ன நடக்குது அப்படிங்கறதுதான் இந்தப் படத்துடைய திரைக்கதை.

இப்பவுமே இளசுகளை படத்துக்கு கூப்பிட்டு வரணும்னா நீங்க இது மாதிரி இளசுகளுக்கு பிடித்தமான கதையா நீங்க வச்சே ஆகணும். வேற வழி இல்ல; இது காலத்தின் கட்டாயம்.

அது மாதிரி காலத்தின் கட்டாயத்தினால இந்தக் கதையை கொடுத்திருக்காங்க. இளன் ஏற்கனவே ஒரு படம் டைரக்ட் பண்ணாரு, அதுலயும் ஒரு இளசுகள் கதைதான்… ‘பியார் பிரேமா காதல்’ அப்படின்னு. இப்ப ‘பியர் பிரேமா கல்யாணம்’னு அடுத்தப் படத்தை இதே மாதிரி கொண்டு வந்திருக்காரு.

காதலை இப்ப கல்யாணத்துல முடிச்சிருக்காரு. அடுத்து மூணாவது படம் எப்படி வரும்னு தெரியல.

ஆனா ஓரளவுக்கு நல்ல ஒரு டைரக்ஷன்ல பண்ணியிருக்காரு. ஃபர்ஸ்ட் ஆஃப்ல ரொம்ப அழகா கொண்டு போயிருக்காரு; ஆனா செகண்ட் ஆஃப்ல சுவாரசியமே இல்ல.. காமெடியும் இல்ல. ஃபர்ஸ்ட் ஆஃப்ல கொஞ்சம் காமெடி இருந்தது; செகண்ட் ஆஃப்ல அதை எப்படி உருவகப்படுத்துறதுன்னு தெரியாம கோட்டைவிட்டுட்டாரு.

நல்லா டைரக்ஷன் பண்ணிருக்காரு, அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்ல. நல்ல டைரக்ஷன்தான். ஆனால நமக்கு சுவாரசியமாவும் இல்ல, காமெடியும் வராததுனால கொஞ்சம் அப்படியே தேமேன்னு உக்காந்துருக்க வேண்டியதா இருக்குது செகண்ட் ஆஃப்ல.

மத்தபடி இந்த படம் ஒரு தடவை பாக்கலாம்ன்ற அளவுக்கு வந்துருக்கு.

நடிப்புன்னு பார்த்தா அத்தனை பேருமே சிறப்பா நடிச்சிருக்காங்க; இளன் பிரமாதம்! அந்தப் பையன் அந்த கேரக்டருக்கு, அந்த வயசுக்கு ஏத்த கேரக்டருக்கு, வயசுக்கு ஏத்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

அழகா, தெளிவா வசனத்தை உச்சரிக்கும்விதமே ரொம்ப அழகா இருக்கு. ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு இளன். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

அடுத்து சான்வி மேக்னா. அந்தப் பொண்ணு பிச்சு வாங்கிருக்கு. குளோசப் ஷாட்ல எல்லாம் அவ்ளோ அழகா சிரிக்குது. ஆனா படத்துல ரொம்ப சிரிக்கிற மாதிரி சீன் இல்ல. நிறைய கோபப்படுற மாதிரியும், ஏமாத்துற மாதிரியும் நிறைய இருக்கு.

ஆனால் அந்தப் பொண்ணுக்கு அந்த வீட்ல இருக்கிறவங்க யாராவது ஒருத்தர் புரிய வச்சிருக்கணும்.

அந்த வசனத்தை இதுல சேர்க்காததுனால நமக்கு என்ன இது ஒரு முட்டாள்தனமான கதையா இருக்கே அப்படின்னு சொல்ல வைக்குது. 

ராதிகா சரத்குமார். சொல்லவே வேணாம். கலையரசி! பிச்சு உதறி இருக்காங்க. மருமகனை மாட்டி விடுற மாதிரியான சீன்ல எல்லாம் அவங்க பார்க்கிற ஒரு பார்வை, முறைப்பு அதுவே ஒரு தனி ஸ்டைல். அதுவே பார்வையாளர்களை ரொம்பவே அதிகமா கவருது.

அதே மாதிரி ஹீரோவோட அம்மா கீதா கைலாசம். அப்பாவுக்கும், மகனுக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற அந்த ஒரு சாதாரண குடும்பத் தலைவி கேரக்டர்ல வந்தாலும், கடைசியா மகன் மாமியார் வீட்ல கஷ்டப்படுறத பாத்த உடனே அவங்க அழுகுறாங்க பாருங்க, செமையான அழுகை. அது ஒரு காமெடியா… அந்த இடத்துல மட்டும்தான் வந்துச்சு.

அதுலயும் எப்படியாவது மகனை காப்பாத்தணுமேன்னு துடிக்கிற அந்தத் துடிப்பு, அதுல ஒரு அழகான  நடிப்பை காண்பிச்சிருக்காங்க. ஸ்கிரீன்ல உங்களை பார்க்கும்போது நமக்கே பரிதாபமா இருக்கு. ‘நிஜமா ஏதாவது செய்யுங்கம்மா’ அப்படின்னு நம்ம மனசுக்குள்ள சொல்ல வைத்திருக்கு கீதா கைலாசத்தின் நடிப்பு.

எம்.எஸ். பாஸ்கர், ஒரு இறுக்கமான அப்பா, கண்டிஷனான அப்பா. ‘தனக்கு இப்படித்தான் பேச தெரியும்டா’ அப்படின்னு கடைசியா ஒரு வார்த்தை சொல்றாரு. அதான் அப்பா. அந்த வார்த்தையை முன்னாடியே சொல்லியிருந்தா… சொல்லலாம், எல்லாரும் சொல்லிருப்பாங்க. ஆனால் இது சினிமா. சினிமாவுல கடைசியிலதான் சொல்லியாகணும். வேற வழியில்லை.

சினிமாக்கான சில எலிமெண்ட்ஸ்லாம் இருக்கு. அதையெல்லாம் ஃபாலோ பண்ணிதான் ஆகணும். வேற வழியே கிடையாது. அந்த வகையில் அவருடைய நடிப்பும் இந்த படத்துக்கு ஒரு பூஸ்ட்தான். கண்டிஷனான ஒரு அப்பா இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கிற மாதிரி கரெக்டா பண்ணியிருக்காரு பாஸ்கர் சார்.

அண்ணனா நடிச்சவரு, தாத்தா செந்தில்…, ஹீரோயினோட அப்பாவா நடிச்ச இளங்கோ குமரவேல், இவருக்கு நண்பர்களா நடிச்ச யோகி பாபு, இன்னொரு நண்பர் எல்லாருமே ஓரளவுக்கு சிறப்பா நடிச்சிருக்காங்க.

யோகி பாபு இந்த தடவை ரொம்பலாம் அவனே, இவனேன்ல்லாம் திட்டாம, யாரையும் பாடி ஷேமிங் பண்ணாம நல்லதொரு கேரக்டர்தான் பண்ணிருக்காரு.

ஆனா அவருக்கே அவர் வீட்ல வைஃபை  அடிமைத்தனம் பண்றோம்ன்னு கடைசியா புரிஞ்சு ‘இல்ல நான் தப்பு பண்ணிட்டேன்’ன்ற மாதிரி சொல்றாரு. ஆனா அதை கொஞ்சம் வெளிப்படையா சொல்லியிருக்கணும். அந்த இடத்துல வசனத்தை இன்னும் மாற்றி அமைத்திருக்கணும்.

ஆனா அதுக்கு அந்த வைஃப் சொல்றாங்க, ‘இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ன்னு சொல்றாங்க. இது பெண் அடிமைத்தனமான வசனம். அதை வச்சிருக்கவே கூடாது

மொத்த ஆணாதிக்கத்தை உடைக்கணும்னு நெனச்சா, கடைசியா பெண்கள் ‘எனக்கு இது ரொம்ப பிடிக்குது’ அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்? அப்படித்தான் கடைசியா சொதப்பிவிட்டாரு டைரக்டர்.

சாமியாராக ராதிகா சரத்குமார் ‘நீ பொண்ணா இருந்தாலும் என்னைக்கோ ஒரு நாள் இன்னொரு வீட்டுக்கு போய் வாழப் போற; இப்ப அவங்களுக்கும் ஒரு பையன், அந்தப் பையனை நீ இழுத்துட்டு வர்றது எந்தவிதத்துலயும் நியாயம் இல்ல. அதனால் நீ அவங்க வீட்லயே இரு. இல்ல… தனிக்குடித்தனம் போங்க.. நாங்க அப்பப்ப வந்து பாத்துக்குறோம்’ அப்படின்னு சொல்லிருக்கணும்.

அந்த ஒரு வசனத்தை ராதிகா மூலமாக சொல்லி இருந்தால் அவருடைய கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்சுக்கு மரியாதையாக இருந்திருக்கும்

இது இயக்குநர் செய்த பெரிய தவறு அப்படின்னு நான் நினைக்கிறேன். அதை சொல்லியிருக்கணும்.

ஏன்னா எல்லாத்தையுமே பேலன்ஸ் பண்ணனும். இதோட ராதிகா தன் மருமகனை அடிமையா நடத்தணும்னு நினைக்கல. இவரு பிரண்ட்ஸோட ஐடியாவால மாமியாரை மாட்டிவிடுறாரு. அதனால மாமியாரும் இவரை மாட்டி விடுறாங்க.

அப்படி கொண்டு போறதுக்குப் பதிலா தனிக்குடித்தனம் போற மாதிரி அவங்களே ஒரு ஐடியா சொல்லியிருந்தாங்கன்னா கொஞ்சம் நல்லா இருந்துருக்கும்.

ஆனா அதுவும் இல்லாம கடைசில திருட்டுத்தனமா இன்னொரு கல்யாணம் மாதிரி கொண்டு வந்து நிறுத்தி, சஸ்பென்ஸ் ஒண்ண வச்சிருக்காங்க கடைசியா! அது அந்த அளவுக்கு ஈர்ப்பாக இல்லை.

ஒளிப்பதிவு செம! அவ்வளவு லட்டு, லட்டா, இவ்வளவு கலரோட சமீபமா எந்தப் படத்தையுமே பார்த்ததில்லை. அவ்வளவு கலர் ஸ்கிரீன் முழுக்க பளிச்சுன்னு இருக்கு. ரொம்ப அழகா ஒளிப்பதிவு பண்ணியிருக்காங்க.

அதே மாதிரி மியூசிக் யுவன் சங்கர் ராஜா. பாடல்களை நல்லா போட்டிருக்காரு. அதுலயும் ஒரு கல்யாண பாட்டு ரொம்ப, ரொம்ப கொண்டாடப்பட வேண்டிய பாட்டுதான். இந்த வருஷம் முழுக்க அது நல்லா ஓடும்னு நினைக்கிறோம்.

எடிட்டரும் கொஞ்சம் படம் சேதாரம் இல்லாத அளவுக்கு எடிட்டிங் பண்ணியிருக்காரு. ரசிக்கக் கூடியதாக இருக்கு.

மொத்தத்தில் இந்தப் படம் இன்றைய யூத்துகள் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

லவ்வர்ஸ், காதலர்கள், கல்யாணம் ஆனவங்க… புதுசா கல்யாணமானவங்க.. மாமியார் வீடு – அப்பா வீடு ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிற மருமகன்கள், மாப்பிள்ளைகள், பெண்கள், மருமகள்கள் அனைவரும் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கணும்.

பார்த்தா ஒரு தெளிவு தெரியும். அதனால இந்தப் படம் நிச்சயமாக ஒரு முறை பார்க்கக் கூடிய அளவுக்கு சிறப்பா வந்துருக்கு என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

நிச்சயமாக தியேட்டருக்கு சென்று பாருங்கள்.

RATING : 3.5 / 5

 

Our Score