Modha Rathri cast and crew Details
Cast :
Rishikanth
Anishma Anilkumar
Chetan
A. Venkatesh
Bagavathi Perumal
Abdool Lee
Shelly Kishore
Sangeetha Balan
Banupriya
Sumithra Devi L
Varshini Karmegham
Karthikeyan
Velan
Kowshik Kabilan
*Crew*
Written & Directed by: Raja Karuppasamy
Producers: Naveen Yerneni & Y. Ravi Shankar
Banner: Mythri Movie Makers
Music: Bharath Sankar
Cinematography: Surendran Paranjothi
Editing: Ashok Arjunan
Art Direction: A. Balumahendra
Costume Design: Poornima Ramaswamy
Lyrics: Yugabharathi
Choreography: Anusha Vishwanathan
இந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள் தெலுங்கில் நிறைய திரைப்படங்களை தயாரித்த அனுபவம் கொண்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ்.
அவங்க நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தை தயாரிக்கிறாங்க அப்படிங்கறதே ஒரு பெரிய ஆச்சரியம். அதிலும் ஒரு புதுமுக டைரக்டர் ராஜா கருப்பசாமி என்ற புதுமுக டைரக்டர வெச்சு படம் பண்ணுறாங்கன்னா, அதுலயே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை கிட்டத்தட்ட 95 சதவீதமாவது இந்தப் படம் பூர்த்தி செஞ்சிருக்கு அப்படின்னு உறுதியா சொல்லலாம்.
‘முதல் ராத்திரி’ அப்படிங்கிற தலைப்பைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? ‘முதல் இரவு’ என்றாலே அது திருமணமான அன்று இரவு நடைபெறும் ஒரு திருமண சடங்கு என்பது பொதுவான ஒரு கருத்து.
தமிழ் சினிமாவில் என்றில்லை.. இந்தியாவின் அனைத்து மொழித் திரைப்படங்களிலும் இந்த ‘முதல் இரவை’ப் பத்தி திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பில்டப் பண்ணி வெச்சிருக்காங்க பாருங்க.
நம்முடைய முந்தைய தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறை, நம்முடைய அப்பா, தாத்தா காலத்து திரைப்படங்கள், 1931-லிருந்து வந்த திரைப்படங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னா, அந்த முதல் இவரைப் பற்றி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெச்சிருந்தாங்க.
அப்படி எதிர்பார்ப்பைக் கூட்டுகின்ற அளவுக்கு, கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் எல்லாருக்குமே ஒருவித எதிர்பார்ப்பைக் கொடுக்கிற அளவுக்கு அந்தக் காட்சிகளை ஒவ்வொரு இயக்குநரும் அவங்களுடைய தனித்தனி ஸ்டைல்ல வடிவமைச்சிருந்தாங்க.
அதனால் ‘முதல் ராத்திரி’ அப்படின்னாலே நம்முடைய இளைய சமுதாயத்தினரிடையே ஒரு நக்கல் சிரிப்பு ஒண்ணு வரும். அது பெண்களுக்கும் இருக்கும்.
ஆனா இப்போது அது எல்லாமே டேமேஜ் ஆகி, இப்ப முதல் ராத்திரில அறைக்குள்ளே புது மனைவியைத் தூக்கிட்டே போறாரு மாப்பிள்ளை. அதுவே இப்ப யூடியூப்லயே வந்துருச்சு. இன்னும் முதல் ராத்திரியை லைவ்வா மட்டும்தான் யாரும் காட்டல. அதுவும் போகப் போக காட்டிருவாங்கன்னு நினைக்கிறோம்.
சரி, இப்ப படத்துக்கு வருவோம்.
இந்தப் படம் முழுக்க முழுக்க திருநெல்வேலியை களமாகக் கொண்ட படம். நெல்லைத் தமிழ்தான் இந்தப் படம் முழுக்க பேசப்பட்டிருக்கு.
ஹீரோ ரிஷிகாந்த் துபாயில வேலை பார்க்கிறாரு. அவருக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்தது. அந்த காதலியை திருமணம் செய்ய முடியாமல் போயி, அந்த காதலி இறந்துடுறாங்க.
அதனால இவர் பயங்கர சோகமாகி, இங்க இருந்தா நமக்கு ஒரு மாதிரியா இருக்கும் அப்படின்னு சொல்லிட்டுத்தான் துபாய்க்கு ஓடி இருக்காரு.
இப்ப அவரை அங்கிருந்து வரவழைச்சு அவருக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு அவங்க ஃபேமிலி விரும்புறாங்க.
ஆனா அவரு வர்ற மாதிரி இல்ல. அதனால சும்மா வந்துட்டு போப்பா அப்படின்னு சொல்லி அவரை ஏமாத்தி வர வைக்கிறாங்க. அவர் வந்து இறங்குற அன்னைக்கு காலையிலேயே அவருடைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க.
பொண்ணு அனிஷ்மா அனில்குமார். அனிஷ்மாவுக்கு இன்னொரு பையனோட லவ்வு. அந்தப் பையனா நடிச்சவரு இந்தப் படத்தோட டைரக்டர் ராஜா கருப்பசாமிதான்.
அந்தப் பையனை “கல்யாணத்தன்னைக்கு காலைல வந்து எப்படியாவது என்னைக் கூட்டிட்டு போயிரு” அப்படின்னு அனிஷ்மா சொல்றாங்க. ஆனா அவன் செய்யல. தூங்கிட்டானாம்!
அதனால கல்யாணமும் நடந்துருச்சு. தாலியைக் கட்டிட்டான் புது மாப்பிள்ளை ரிஷிகாந்த். அவனும் முதல்ல கல்யாணத்துக்கு மாட்டேன்னு சொல்லி, கடைசியா அவன பிளாக்மெயில் பண்ணி, உட்கார வெச்சு கல்யாணத்தைப் பண்ணி வெச்சிட்டாங்க.
இப்ப அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்ல “எப்படியாவது ஃபர்ஸ்ட் நைட் நடக்குறதுக்கு முன்னாடியாச்சும் என்னைக் கூட்டிட்டு போ”ன்னு அனிஷ்மா லவ்வரைப் போட்டு டார்ச்சர் பண்றாங்க.
அந்த லவ்வரும், “எப்படியாவது ராத்திரி வந்துடுறேன். நீ உங்க குல தெய்வம் கோயிலுக்குப் பக்கத்துல வந்து நில்லு. அங்கேயிருந்து ரெண்டு பேரும் ஓடிப் போயிடலாம்..” அப்படின்னு சொல்லிட்டு, அவனும் யமஹா பைக்ல பத்திக் கிட்டு வர்றான்.
ஆனா இந்தப் பொண்ணு கிளம்பப் போறது ரிஷிகாந்துக்கு தெரிஞ்சிடுது. என்ன விஷயம்னு கேட்கும்போது அனிஷ்மா மொத்தக் கதையையும் சொல்லிட்டாங்க.
‘நான் ஒரு பையனை டீப்பா லவ் பண்றேன்; அவன்கூடதான் வாழணும்னு நினைக்கிறேன்; என்ன அவன்கூட அனுப்பி வெச்சிருங்க’ அப்படின்னு..!
அனிஷ்மாவோட அம்மாவும், அப்பாவும் அங்கதான், மாப்பிள்ளை வீட்டிலதான் தங்கி இருக்காங்க. அதனால “இவங்களை எல்லாம் தாண்டி போக முடியாது, நான்கூட வர்றேன்”னு சொல்லி, மாப்பிள்ளைக்காரனே பொண்ணைக் கூட்டிட்டு போய் காதலனிடம் ஒப்படைக்கப் போறார்.
கடைசீல அனிஷ்மா லவ்வரோட போனாங்களா? இல்ல ஹீரோவோட, அதாவது தாலி கட்டின கணவனோடயே திரும்பி வந்தாங்களா? அங்கே என்ன நடந்துச்சு? அப்படிங்கறதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.
ஒரு புதுமுக இயக்குநர் இந்த அளவுக்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாத்தையு இவ்ளோ அழகா பண்ணியிருக்கிறது ரொம்ப ரொம்பப் பெரிய விஷயம்.
சீரியஸ் படத்தை ஈஸியா எடுத்திரலாம். இந்த மாதிரி விஷயத்துல சீரியஸ் படமா அழகா பண்ணிரலாம். ஆனால் காமெடியைக் கொண்டு வர்ற மாதிரி சிச்சுவேஷன் காமெடியும், டயலாக் காமெடியும் எழுதுறது கஷ்டம்.
நூத்துல ஒருத்தருக்குத்தான் அந்த மாதிரி திறமையை ஆண்டவன் கொடுத்திருப்பான். அந்த அழகான திறமை இந்தப் இயக்குநரு இருக்கு. அவருக்கு என்னுடைய முதல் சல்யூட். அற்புதமா டைரக்ஷன் பண்ணியிருக்காரு.
அதே மாதிரி நடிப்பு அப்படின்னு பார்த்தா டைரக்டர் கரெக்டா இருந்தா நடிப்பு தானா வரும். அதில் எந்த மாற்றமும் இல்ல; யாரும் சொல்லவும் தேவையில்லை.
ஒரு படத்துல நடிப்பு நம்மள கவர்ந்துச்சுன்னா, அந்த அளவுக்கு நடிக்க வெச்சிருக்காரு அந்த இயக்குநர்ன்னு நினைச்சுக் கடும். அதுதான் உண்மை. அந்த அளவுக்கு இந்தப் படத்துலயும் அத்தனை நடிகர், நடிகைகளையும் அழகா நடிக்க வெச்சிருக்காரு இந்த டைரக்டர்.
ரிஷிகாந்த்தை எடுத்துக்கிட்டா அவரு ஏற்கனவே ரொம்ப ஃபீலிங்ல வர்றாரு; லவ் ஃபெயிலியர், வாழ்க்கையில எதுவும் பிடிக்கல. சொந்தக்காரங்களையும், அப்பாவையும், அம்மாவையும் பார்க்கப் பிடிக்கல; ஏன்னா அவங்களோட டார்ச்சராலதான் அந்தப் பொண்ண அவரு கைவிட வேண்டியதாயிருந்துச்சு.
அவ்வளவு பிரச்சனையில வர்றவரு, அந்த ஏமாற்றம், கோபம், விரக்தி.. இதோட உடனே கல்யாணமா அப்படின்னு சொல்லி பிடிக்காத நிலையில் மணமேடையில உட்காருறதுல இருந்து ஆரம்பிச்சு, தன்னுடைய முகபாவனையிலேயே தனது அதிருப்தியைக் காட்டிட்டு,
கடைசியா அனிஷ்மாவுடன் “சரி வா… உங்க ரெண்டு பேரையும் நான் சேர்த்து வைக்கிறேன். நீயாவது நல்லா இரு…” என்று அவர் சொல்வதை காதலுக்கு அவர் செய்யும் மரியாதையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
‘நம்மதான் லவ் பண்ணி அது முடியல; ஆனா இங்க ஒரு பொண்ணு லவ் பண்றேன்னு சொல்லுது; அத ஏன் நம்ம கெடுப்பானேன்? நம்ம லவ்வுக்காக இவ்வளோ ஏங்குறோம்; அதே மாதிரிதானே அந்தப் பொண்ணும் ஏங்கும்; அதனால அவளை சேர்த்து வைக்கலாம்” என்று அவர் நினைப்பது அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை உயர்த்திவிட்டது.
அந்த இடத்துல எல்லாம் அவருடைய நடிப்பு A1. அதுக்கப்புறம் கடைசியா அவரு தன்னுடைய மனைவியைக் காப்பாற்றுவதற்காக செய்கின்ற ஒவ்வொரு செயலும், அந்த பேச்சும் பிரமாதம்.
அதுல கடைசியா பொங்குவாரு பாருங்க ஒரு இடத்துல கஅட்டகாசம்! நிஜமா கை தட்ட வெச்சிட்டாரு.. அந்த இடத்துல ரிஷிகாந்த் தன்னுடைய நடிப்பை நிறைவு செய்திருக்கிறார்.
ரெண்டாவது, இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம் ஹீரோயினா நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், முத்துச்செல்வியா நடிச்சிருக்காங்க. சும்மா சொல்லக் கூடாது. பின்னி எடுத்திருக்கே அந்தப் பொண்ணு!
அதுலயும் பாத்ரூம்ல உட்கார்ந்துகிட்டு அந்த லவ்வரை திட்டும் பாருங்க.. அவ்வளவு ஃபாஸ்ட்டா பேசுது அந்த டயலாக்கை.
நெல்லைத் தமிழ் டயலாக்கே நமக்கு நாக்க சுழல்ற மாதிரி இருக்கும். இதுவும், அவ்வளவு கோபமா பேசுது. படபடன்னு பேசுது. ஒரு சில டயலாக்குகள் இதனாலயே நமக்குப் புரியல; ஆனா அந்தப் பொண்ணோட கோபம் மட்டும் நமக்கு புரியுது. தெரியுது. அந்த அளவுக்கு ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கு அந்தப் பொண்ணு.
கடைசில தான் நினைச்சது நடக்கவில்லை என்ற உடனேயே அப்படியே ஒரு ஏமாற்றத்தோட கடைசி வரைக்கும் உட்கார்ந்திருக்கும் பாருங்க… அந்த காட்சிகளில் அந்தப் பொண்ணைப் பார்த்தாலே. பாவமா இருக்கும்.
அந்தப் பொண்ணு என்ன பண்ணும்? ஏன்னா ஆம்பளைங்க மனசு எப்படி இருக்கும்னு அந்த சின்ன பொண்ணுக்கு தெரியாது.
இப்படி ஒரு பொண்ண லவ் பண்ணவன் பாதியிலேயே ‘ஏம்மா எனக்கு உன்ன வெச்சு சோறு போடுற அளவுக்கு திராணி இல்ல, தெம்பில்ல, பொட்டன்ஷியல் இல்ல; அதனால என்ன விட்டுரும்மா’ன்னு சொல்லிட்டு ஓடிப் போனா அந்தப் பொண்ணுக்கு எப்படி இருக்கும்?
அந்த ஒரு வலியை அந்த முகத்துல காட்டுது அந்தப் புள்ள. ரொம்பவும் அபாரமான நடிப்பு அந்தப் புள்ளைக்கு.
அப்புறம் மூணாவது, அனிஷ்மாவின் காதலனாக நடித்த இந்தப் படத்தோட டைரக்டர் ராஜா கருப்பசாமி. ரொம்ப சிறப்பா நடிச்சிருக்காரு. அவரும் நாலஞ்சு இடத்துல சிரிப்புன்னா சிரிப்பு… அப்படி ஒரு சிரிப்பை தன்னுடைய நடிப்பில், கொண்டு வந்திருக்காரு.
அப்புறம் மூன்று பேரை முக்கியமாக சொல்ல வேண்டும். பெண்ணின் சித்தப்பாவான பக்ஸ் என்ற பகவதி பெருமாள். மாப்பிள்ளையின் அப்பாவான வெங்கடேஷ், மாப்பிள்ளையின் தங்கை வீட்டுக்காரரான அப்துல் லீ.
பக்ஸ் எதுக்கெடுத்தாலும் சண்டை போட்டு “நான் ஊருக்குப் போறேன்… ஊருக்குப் போறேன்… ஊருக்குப் போறேன்னு சொல்ற மனுஷன். எல்லாரையும் நக்கல் பண்ணிட்டு, கிண்டல் பண்ணிட்டு இருக்காரு.
இவரை சமாளிக்கிறதுக்காகவே மாப்பிள்ளை வீட்ல இருந்து அனுப்பப்படும் அப்துல் லீ ஒரு அளவுக்கு போராடிப் போராடி பார்த்துட்டு கடைசீல அடிச்சுப்புடுறா’ன்னு படம் பார்க்கும் ரசிகர்களை சொல்கிற அளவுக்கு அவ்வளவு பொறுமையா நடிச்சிருக்காரு.
ஆனால் கடைசியில அவங்களுக்குள்ளயே அடிதடி நடக்கும் பாருங்க… செமத்தியான அந்த சீன்.
ஒரு சண்டை ஸ்கிரீன்ல நடக்கும்போது நமக்கு காமெடி வந்துச்சுன்னா அத எந்த அளவுக்கு டைரக்ட் பண்ணிருப்பாங்கன்னு பாருங்க! அந்த இடத்துல. அந்த டீம் மொத்தத்தையும் ரொம்ப அழகா டைரக்ஷன் பண்ணி வெச்சிருக்காரு இயக்குநர்.
நடிகர் சேத்தன். குலதெய்வக் கோவில் பூசாரி. “கோவிலை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க. எல்லாரும் வேற வேற கோவிலுக்கு போறாங்க, குலதெய்வத்தை கும்பிட மாட்டேங்கிறாங்க, குல தெய்வத்துக்கு ஒரு பத்திரிக்கைகூட வைக்க மாட்டேங்கிறாங்க”ன்னு அவரு புலம்பி தள்ளுறாரு.
அவரு புலம்புறத கேட்டுத்தான் இப்படி ஒரு டிராமாவை குல தெய்வமே கொண்டு வந்து விட்ருச்சோன்ற மாதிரி, கடைசியா அந்த கோவில்லதான் அவங்களுக்கு விடிவு காலமே பிறக்குது.
இதுக்கு இடையில சேத்தன் இவங்களை சமாளிக்கிறவிதமும், அவங்ககிட்ட பேசுறவிதமும்… பிரமாதமா நடிச்சிருக்காரு. சேத்தன். அற்புதமான நடிகர். இத்தனை வருடங்கள் கழித்து இப்போது மிக முக்கிய குணச்சித்திர நடிகரா மேல வந்துகிட்டு இருக்காரு. நிச்சயமா அவரை நாம் பாராட்டணும்.
இன்னொரு கிளைக் கதையா முதல் ராத்திரியில மணமக்கள் பயன்படுத்த வேண்டிய கட்டிலை ரெடி செய்து கொண்டு வரும் தச்சர் டீமும் இடையில இடையில வந்து காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.
அப்புறம் பெண்கள்ல பார்த்தீங்கன்னா சங்கீதா பாலன் ஹீரோவோட அம்மா. அந்தப் பக்கம் ஷெல்லி, ஹீரோயினோட அம்மா.
அவங்களை சுத்தி இருக்கிற சொந்தக்காரங்க.. சொந்தக்காரப் பிள்ளைகள்… அவங்களை சேர்த்து ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி டிராமா போட்டு, ஒவ்வொருத்தரா அவங்க அவங்க பிரச்சனைகள வெளில சொல்லாமல்…
பொண்ணு வீடு மாப்பிள்ளை வீட்டு பிரச்சனைய பத்தி பேசுறது, மாப்பிள்ளை வீடு பொண்ணு வீட்டோட பிரச்சனையைப் பத்தி மட்டும் பேசுறது… இப்படி அவங்களுக்குள்ள நடக்குற அந்த கோளாறுகள், குளறுபடிகள் எல்லாத்தையும் ரொம்ப அழகா நடிப்புல கொண்டு வந்திருக்காரு.
உண்மையா இடைவேளைக்கு பின்னாடி இந்தப் படம் பரபரபரபரன்னு போகுது. அப்படி ஒரு பரபரப்பை, ‘சரி என்னதான்டா ஆகும் அந்தப் புள்ளௌக்கு?’ அப்படின்ற மாதிரி நமக்கு ஒரு ஈர்ப்பை கொடுத்திருக்கிறது இந்தப் படம்.
சிறந்த டைரக்ஷனை செய்திருக்கிறார் இயக்குநர். அதனால இயக்குநர் ராஜா கருப்பசாமியை பாராட்டுகிறோம்.
தொழில் நுட்பத்திலும் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், கலை இயக்கம் அத்தனையிலும் இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய பாராட்டைப் பெறக் கூடிய ஒரு திரைப்படம்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் சிறப்பா பண்ணியிருக்காங்க. அதுல இந்த கேமராமேன்லாம் என்ன பாடுபட்டாரோ தெரியல?
கேமராவ இடுப்புல தூக்கிட்டேதான் திரியணும். எப்படித்தான் இத்தனை நாளு சூட்டிங்கை அவர் சமாளிச்சாரோ தெரியல.
வீட்டுக்குள்ள நடக்குற சீன்ஸ், சண்டை காட்சிகள், வெளில பொண்ணும், மாப்பிள்ளையும் பேசுற காட்சிகள் எல்லாத்தையும் கண்டிப்பா கேண்டி கேமராவாலதான் சூட் பண்ணிருக்காங்கன்னு நல்லா தெரியுது. நிச்சயமாக அந்த கேமராமேனை நாம பாராட்டணும்.
அடுத்து படத் தொகுப்பாளர். இவ்வளவு சண்டைக் காட்சிகள், இவ்வளவு காமெடி காட்சிகள், இதையே காமெடியா மாத்தணும் அப்படின்னு சொன்னா அதுக்கெல்லாம் மிகச் சரியான கட்டிங் வேணும். அந்த கட்டிங்கை கரெக்டா பண்ணியிருக்காரு படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
அடுத்து இசையமைப்பாளர். ரொம்ப தேவையான இடங்கள்ல மட்டும்தான் பின்னணி இசையைப் போட்டிருக்காரு. பாடல்களை கொஞ்சம் மனசைத் தொடுற மாதிரி ஓரளவுக்கு பண்ணிருக்காங்க.
பிரில்லியண்ட் ஸ்கிரீன் பிளே, பிரில்லியண்ட் கேரக்டர் ஸ்கெட்ச் அனைவருமே நல்லா பண்ணியிருக்காங்க. அனைவருக்கும் எந்தத் தவறும் இல்லாத கேரக்டர் ஸ்கெட்ச்.
கல்யாணம்ன்னா சாதாரணமான விஷயம் இல்ல. ஒரு கல்யாணத்துல ஒருத்தர் மட்டுமே வேலை பாக்கல. ஒரு குடும்பம் மட்டுமே வேலை பாக்கல. மொத்த சொந்தக்காரங்களும் வேலை பாக்குறாங்க. உழைக்கிறாங்க.
அதனால காதல்ன்னா முதல்லயே வீட்ல சொல்லி பர்மிஷனை வாங்கிடணும். இல்லையா… பர்மிஷன் குடுக்கலையா… “பர்மிஷன் குடுக்குறவரைக்கும் வெயிட் பண்றேன்” அப்படின்னு சொல்லி ஏதாவது ஒண்ண செஞ்சு பெற்றோர்களின் மனதை மாற்றணும். இல்லைன்னா லவ்வைக் கை விட்றணும்.
ஆனால் கல்யாணத்தன்னைக்கு ஓடிப் போறது மாதிரியெல்லாம் தமிழ்நாட்டுல நிறைய நடக்குது. அதெல்லாம் ரொம்ப தவறான விஷயம்.
அவங்க அம்மா, அப்பாவுக்கு இது எவ்வளவு வேதனையா இருக்கும்? அவங்க சொந்தக்காரங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்?
அதுக்கு முன்னாடியே சொல்லிட்டு போயிட்டா பிரச்சனையே கிடையாதுல்ல?
கல்யாணமும் நிச்சயமாகி, பத்திரிகையும் அடிச்சு, மண்டபமும் ரெடியாகி, கல்யாணத்தன்னைக்கு காலையில ஓடிப் போனால் எப்படி? அதுலேயும் கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போனால் அது எப்படி?
இப்பவும் சில முட்டாள்கள் ‘லவ்’ அப்படிங்கிற பெயரில் இதை செய்து கொண்டு தன் இருக்கிறார்கள்
இதெல்லாம் லவ்வே கிடையாது, முட்டாள்தனம். பச்சை முட்டாள்தனம்.
ஏன்னா எல்லாருமே கல்யாணம் பண்ணித்தான் வாழப் போறாங்க. எல்லாருக்கும் ஒரே ஒரு வேலைதான். பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதுக்கப்புறம் அந்தப் பிள்ளைய வளர்க்கணும். அதுக்கப்புறம் அந்த பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைத்து பேரன் பேத்திகளை பார்க்க வேண்டும் கடைசியில் அவர்களுடனேயே வாழ்ந்து சாக வேண்டும். அவ்வளவுதான்.
காதலித்த கல்யாணம் பண்ணினாலும் இதைத்தான் செய்யப் போறாங்க. பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையோ, பொண்ணையோ கல்யாணம் செய்தாலும் இதுதான் நடக்கப் போகுது.
அதனால் காதல் அப்படின்னு வந்தால் அதை முன்கூட்டியே குடும்பத்தினரிடம் சொல்லணும். முடியல, குடும்பச் சூழல் அப்படி இருக்கு அப்படின்னு சொல்லி மறைப்பதை விட்டுவிட்டு வெளிப்படையா சொல்ல வேண்டும்.
பெற்றோர்களை அழ வைக்கக் கூடாது. அந்த ஒரு கருத்தை கொஞ்சம் அழகாக, கரெக்டாக இந்தப் படத்தில் சொல்லியிருக்காங்க.
அதோட இன்னொரு விஷயமும் இந்தப் படத்துல இருக்கு. அதுதான் ரொம்ப ரொம்ப பாராட்டக் கூடியது.
நெல்லை மாவட்டத்தில் ரொம்பவும் அதிகமாக தீண்டாமை கொடுமை இப்போதும் இருக்கு.
ஜாதி வெறி. மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று எப்பவும் பேசுவார்கள். பேருந்தில், டீக்கடைகளில், பொது இடங்களில் ஒரு சிலரின் பேச்சு, நடத்தையை வைத்தே யார் என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.
கல்யாணத்திற்கு மைக் செட் கொண்டு வந்தவர்கள் கீழ் சாதிக்காரர்களாக இருக்க, அவர்களை மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ் தரக் குறைவாகப் பேசுவார்.
அதோடு அந்த ஜாதிப் பிரச்சனைய அப்படியே திரைக்கதையில் தொட்டுக் கொண்டு வர்றாங்க.
மகனையும் மருமகளையும் தேடுவதற்காக வண்டியை எடுக்கும்படி அந்தப் பையனிடமே வெங்கடேஷ் கெஞ்சி கேட்பதும், பைக்கில் போகும்பொழுது அவனை பிடித்துவிடக்கூடாது என்பதற்காக பின்னால் தள்ளி உட்கார்ந்திருப்பதும் சுவையான திரைக்கதை.
பைக்கில் இருந்து கீழே விழுந்தவுடன் கடைசியாக அந்தப் பையன் கை கொடுத்து தூக்கிவிடுவதெல்லாம் கை தட்ட வைத்த காட்சி. இதற்காகவும் இந்த இயக்குநரைப் பாராட்டுகிறோம்.
இந்தப் படம் நாம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம்; மிஸ் பண்ணக் கூடாத ஒரு திரைப்படம்.
நிச்சயமாக நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு பார்த்து மகிழ வேண்டும்.
RATING : 4.5 / 5









