தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் இயக்குநர் ராஜு சந்திராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’.
மலையாளியான ஐஸ்வர்யா அனில் இந்த ‘பிறந்த நாள் வாழ்த்துகள்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்கிய வேடத்தில் ரோஜி மேத்யூ நடிக்கிறார்.
மற்றும் சந்தோஷ் சுவாமிநாதன், ராகந்த், மிமிக்ரி பாபு, வினு அச்சுதன், அமித் மாதவன், விஷ்ணு, இம்பரஸ், பக்தவத்சலன், சுல்பியா மஜீத், ஈஸ்வரி மற்றும் வீரம்மாள் ஆகியோர் நடித்துள்ளனர்.
இணை தயாரிப்பு – மாதன்ஸ் குழுமம், படத் தொகுப்பு – தாஹிர் ஹம்சா, இணை இயக்கம் – பினு பாலன், இசை – ஜி.கே.வி.நவநீத், கலை இயக்கம் – வினோத்குமார்.
இது இயக்குநர் ராஜு சந்திரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ‘ஐயெம் ஏ பாதர்’, ‘ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச் சாராயச் சாவுகளால் இந்தியாவே அலறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அது போன்ற கதையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது..!
Our Score









