full screen background image

ஒரு நடிகைக்காக சண்டையிட்ட இரண்டு இயக்குநர்கள்..!

ஒரு நடிகைக்காக சண்டையிட்ட இரண்டு இயக்குநர்கள்..!

பெரிய இயக்குநர்களும், சாதனையாளர்களும் தாங்கள் வந்த இடத்தில் சத்தமே இல்லாமல் தாங்கள் வந்த வேலையை மட்டும் செய்துவிட்டு புகழோடு திரும்பிச் செல்வார்கள்..

சாதனைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்கின்ற இரண்டாம் நிலையில் இருப்பவர்கள்தான்  நகைச்சுவையாக எதையோ சொல்வதை போல சில சங்கடங்களை கூலாகச் செய்துவிட்டுப் போவார்கள். இதைத்தான் நேற்றைய காதல் பஞ்சாயத்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ஜாக்குவார் தங்கமும், பேரரசுவும் செய்தார்கள்.

DCIM (42)

பேரரசு அனைவருக்கும் முன்பாகவே வந்திருந்து, காத்திருந்தார். ஜாகுவார் தங்கம் டிரெயிலர், பாடல்கள் ஓடிய பின்பு மேடையில் அனைவரும் அமர்ந்த பின்பே தாமதமாக வந்து சேர்ந்தார். அவரை மேடைக்கு அழைத்தபோது கிடைத்த இடத்தில் அமர்ந்தார் ஜாகுவார். அவரது அருகில் படத்தின் ஹீரோயின் நேகாவும் அமர்ந்திருந்தார். இது பொறுக்கவில்லை இயக்குநர் பேரரசுவுக்கு..!

DCIM (19)

ஏதோ நகைச்சுவையாக பேசுவதாக எண்ணி, “இனிமே எந்த பங்ஷனுக்கும் லேட்டாத்தான் போகணும்னு இன்னிக்குத் தெரிஞ்சுக்கி்ட்டேன். ஏன்னா இந்த விழாவுக்கு நான் சீக்கிரமா வந்ததுனால எனக்குக் கிடைச்சது வடையும், தோசையும், காபியும்தான். இங்க பார்த்தீங்களா.. நம்ம ஜாகுவாரு..! லேட்டா வந்தாரு.. எங்க உக்காந்திருக்காரு பாருங்க.. யார் பக்கத்துல உக்காந்திருக்கா பாருங்க..? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்..” என்றார் பொறுமலுடன்..

jaguar thangam

ஜாக்குவார் தங்கம் பேசும்போது இதைக் குறிப்பிட்டு பேசி, “பேரரசு ரொம்ப பொறாமைப்படுறாரு.. ஏதோ நான்தான் வேணும்னே தி்ட்டம் போட்டு லேட்டா வந்து ஹீரோயின் பக்கத்துல சீட்டை பிடிச்சிட்டேன்னு.. எனக்கு எதுக்கு பொல்லாப்பு..” என்றவர் ஹீரோயினிடம் பேரரசுவின் அருகில் போய் அமரும்படி சொன்னார்.

ஹீரோயின் மிகவும் தயங்க.. “சீரியஸாத்தாம்மா சொல்றேன்.. போம்மா.. போய் அங்க உக்காரு..” என்று சொல்ல.. வேறு வழியே இ்ல்லாமல் கூச்சத்துடன் எழுந்து சென்ற ஹீரோயின் பேரரசுவின் அருகில் போய் அமர்ந்தார். புகைப்படக்காரர்கள் இதனையும் கிளிக் செய்ய..

DCIM (34)

மறுபடியும் மைக்கில், “பேரரசு முகத்தை பாருங்க.. எத்தனை பூரிப்பு.. இதுக்குத்தான.. இதெல்லாம்..?” என்று கேட்டு ஜாக்குவார் சிரித்தார்.. பாவம் அந்த ஹீரோயின்..!

ஒரு பொது விழாவில் ஒரு நடிகையை நுகர்வுப் பொருளாக பாவிக்கும் மனப்பான்மையை சினிமாவுக்குள்ளே இருக்கும் சினிமா இயக்குநர்களே வளர்த்துவிட்டால் எப்படி..?

ம்.. இதையெல்லாம் பார்த்து நமக்குத்தான் சிரிப்பு வந்தது..! கெட்ட காலமடா சாமின்னு..!

Our Score