இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கும் ‘பேராசை’

இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கும் ‘பேராசை’

திருமதி சக்தி அருண் கேசவன் மற்றும் ஷிஹான் சரவணன் இருவரும் ஈசன் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் பேராசை’.

இந்தப் படத்தில் பல தொலைக்காட்சித் தொடர்களில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ கதாநாயகனாக நடிக்கிறார். யாரடி நீ மோகினி’  தொலைக்காட்சி தொடரில் மூன்று கதாநாயகிகளுடன் நடித்து வருபவர்தான் இந்த ஸ்ரீ. மேலும், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகனாவார்.

மேலும் ஒரு கதாநாயகனாக கௌஷிக் நடிக்கிறார். இவர், ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

மாடல் அழகிகளான தீஷிகா, வெண்பா இருவருடன் கிரிஜாவும் இணைந்து மூன்று கதாநாயகிகளாக வலம் வருகிறார்கள். மேலும், பூ விலங்கு’ மோகன். சிறுத்தை விசித்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

சங்கர் கணேசின் உதவியாளரான வி.ஆர். ராஜேஷ் என்கிற சுதர்சன் இசையமைப்பாளராக இதில் அறிமுகமாகிறார்.

படத் தொகுப்பு – முத்துராஜ், புகைப்படங்கள் - விஜய் மணி, டிசைன்ஸ் - சசி & சசி, ஒளிப்பதிவு - ஜேசன் வில்லியம்ஸ், கலை இயக்கம் – செந்தில், நடன இயக்கம் – ராதிகா, வசனம், இணை இயக்கம் - கஜபதி, கதை, திரைக்கதை – ஈசன், தயாரிப்பு மேற்பார்வை - வணக்கம் ராஜா, இயக்கம் - இ.வி.ஆர்.முத்துக் குட்டி.

"வறுமையை நினைத்து பயந்து விடாதே. திறமை இருக்கு மறந்து விடாதே" என்பதை மறந்து வறுமைக்கு பயந்து குடி’க்கு ஆளான ஒருவன், போதையில் எடுக்கும் முடிவுகளெல்லாம் அவனுக்கு எதிராக எதிர்வினை புரிகின்றன.

இதிலிருந்து அவன் மீண்டானா..? இல்லையா…? என்பதை கதைக் களமாக்கி இ்த்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

நாகர்கோவிலிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இத்திரைப்படம் 2021 பொங்கல் தினத்தன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது.