பத்திரிகைகளுக்கிடையே ஏற்படும் மோதல்தான் ‘பெப்பே’ படத்தின் கதையாம்..!

பத்திரிகைகளுக்கிடையே ஏற்படும் மோதல்தான் ‘பெப்பே’ படத்தின் கதையாம்..!

T.M.R. Films சார்பில் தயாரிப்பாளர் G.R.ராஜ்தேவ் தயாரித்து, இயக்கும் படம் ‘பெப்பே.’ இதில் விஜய் அரவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகுகிறார். பைசா படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடிக்கின்றார். இவர்களுடன்  பன்னீர், இமான் அண்ணாச்சி, ராமச்சந்திரன்,  தீனா,  தேவிபிரியா, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இசை - ஜெனி சாமுவேல், ஒளிப்பதிவு - G.K.ரவிகுமார், படத் தொகுப்பு -C.கணேஷ்குமார். நடனம் - சத்தி சுபாஸ், நவதீப், பாடல்கள் - மூ - ஜெகன் சேட் (அறிமுகம்), தயாரிப்பு – G.R.ராஜ்தேவ். V.C.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகிய இயக்குநர்களிடம், இணை மற்றும் துணை இயக்குனராய் பணியாற்றிய G.R.ராஜ்தேவ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராஜ்தேவ், “தனது அப்பா தொழில் தொடங்க பணம் தர மறுப்பதால் ஹீரோ வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களின் உதவியுடன் ‘தென்காசி ஜில்லா’ என்ற விளம்பர பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறார்.

அதே தென்காசியில் வில்லன் பத்து வருடங்களாக ‘தென்காசி பில்லா’ என்ற விளம்பர பத்திரிகையை அந்த வட்டாரத்தில் முன்னனி பத்திரிகையாக நடத்தி வருகிறார். இதனால் புதிதாக விளம்பர பத்திரிகை தொடங்குபவர்களை ஏதேனும் ஒரு வழியில் சூழ்ச்சி செய்து அவர்களை தடுக்கிறான்.

இந்த விவரம் தெரியாத நாயகன் எப்படி தனது ‘தென்காசி ஜில்லா’ பத்திரிகையை நடத்தி, தனது தொழிலில் அனைத்து தடைகளையும் தகர்த்து எவ்வாறு வெற்றி பெறுகிறான் என்பதை காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக கூறும் படமே இந்த ‘பெப்பே’ திரைப்படம்.

தென்காசி, திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, குற்றாலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதி அறிவிக்கப்படும்..” என்றார்.